பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 219 17. அழுக்காறாமை அழுக்கு ஆறா மெய் என்று அழுக்காறாமை எனும் சொல்லைப் பிரித்துப் பார்க்கிறோம். அழுக்கு என்றால் உடல் மாசு, மன மாசு, களங்கம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு. ஆறா என்றால் நீங்காத, மாறாத, தீராத என்று பல பொருள்கள் உண்டு. மெய் என்றால் உடல். உடலிலும் மனதிலும் எப்போதும் மாசு நீங்காமல் இருக்கும். மாசுபடுகிற மனதில், எல்லாவிதமான எரிச்சலும், நோலாமையும் நோணாமையும் நிறைந்தே கிடக்கும். சிற்றின்ப ஆசை சீறிப் பாயும், விரோதம் சுரந்து பெருகும், செருக்கு புயலாய் கிளம்பும், பொறாமை, அற்பத்தனமான ஆசைகளும், பேராசைகளும் குடிகொண்டிருந்தாலும், அந்த உடலானது ஆலயம்தான். மனமானது கோயில்தான். தண்ணிரில் படர்ந்திருக்கும் பாசியைப் புறம் தள்ளினாலும், தள்ளப்பட்ட வேகத்திலே திரும்பி வருவதைப் போலவே, அகற்ற அகற்ற அகலாது; நீக்க நீக்க நீங்காது, ஆற்ற ஆற்ற ஆறாது வருபவைதாம் பொறாமையும் மற்றும் புரையோடிய எண்ணங்களும். மண்ணில் கலங்கிய நீர்போலவே மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மனம் கெடுகிறபோது, அவரின் செயல்பாடுகள் அடுத்தவரையும் அன்பில்லாமல் தாக்குகிறது. அதைப் பண்போடு பொறுத்துக் கொள்ளும் பேராண்மையையே, பொறையுடைமை என்று போற்றினார் வள்ளுவர். அதற்கு அடுத்த அதிகாரத்தில், மற்றவர் மனக்கோட்டத்தை மனஓட்டத்தைப் புரிந்து கொண்டு, மன்னித்து மறந்து பொறை காட்டுவது போல, தன் மனத்தையும் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். அழுக்கே வழியாக (ஆறாக) உள்ள மனம் அழித்தாலும் தழைத்துப் பிழைக்கின்ற மாசுகள். இவற்றைத் தடுப்பதும், தவிர்ப்பதும், குறைப்பதும்; பண்பாற்றல்களை நிறைப்பதும், வளர்ப்பதும் ஓர் அறனின் கடமை, பெருமை என்பதைக் குறிக்கவே பொறையுடை மெய்க்குப் பின் அழுக்காறு உடை மெய் யினை அடையாளம் காட்ட இந்த அதிகாரத்தை வைத்துள்ளார்.