பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா o தேகமானது, மந்திர சக்தியில் மயங்குவதுபோல, களவுக்குக் கட்டுப்பட்டு விடுகிறது. கட்டுப்பட்டு விட்ட தேகத்தில் கட்டுக்கடங்காத குழப்பங்கள். ஆங்கே கிளர்ச்சி பெற்று. உடல் வளர்ச்சியை, உள்ளத்தின் மலர்ச்சியை, ஆன்மாவின் எழுச்சியை, அழித்து விடுகிறது. அவர் எவ்வளவு ஆற்றல் பெற்றவராக விளங்கினாலும், வானம் போல் ஞானம் நிறைந்தவராக முழங்கினாலும், எல்லாம் அழிந்து போகும் என்பதைத் தான் இல் என்றார். ஆற்றல் புரிந்தார் என்றால் வெற்றியை விரும்பினார். பெருமையை வேண்டினார், வலிமையை வாஞ்சித்தார் என்று நாம் பொருள் கொள்கிறோம். அத்தனைத் தரமும் திறமும் இருந்தும், அவரால் அருமையாகப் பெருமையாக வாழி முடியாது. அவர் அனைத்திலும் தோற்று, அழிந்து விடுவார் என்கிற கருத்தை வலியுறுத்தவே இல் என்று கூறினார். நல்ல உடலில் நல்ல மனம். நல்ல மனமே நல்ல வாழ்வைத் தரும் என்று ஏழாம் குறளில், களவினது கசக்கும் உண்மையையும், அது கைக்கொண்டவரை அழித்தே தீரும் என்று வாழ்க்கை நிலைமையையும் மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றார். 288 அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு பொருள் விளக்கம்: அளவறிந்தார் = ஞானத்தை அறிந்து கொண்டவரது நெஞ்சத்து = அன்பு மனத்திற்குள்ளே அறம்போல = நல்வினையாகிய ஒழுக்கம் களவறிந்தார் = பிறர் பொருளைக் கவர்வதில் தேர்ந்தவரது நெஞ்சில் = மனதிற்குள்ளே கரவி = முதலை போன்ற வஞ்சகம் நிறைந்த கடும்பற்றுள்ளம் நிற்கும் நீங்காது நிலை பெற்று நிற்கும். சொல் விளக்கம் : அளவு - ஞானம்; நெஞ்சம் - அன்பு, மனம்: அறம் ஒழுக்கம் நல்வினை o தவம்; கரவு = முதலை, வஞ்சகம், அற்ப ஆசை. கடும்பற்றுள்ளம்