பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 429 அதன் உயர்ப்பொருளான மனமும், குற்றங்களால் நெருக்குண்டு, குலைந்து போயிருக்கின்றனவே, அதற்கென்ன பரிகாரம்? குற்றப்படின் என்றார். குற்றமே அந்த ஆன்மாவுக்குள் படிந்து போய்க் கிடக்கின்றன. அதன் மூலம் ஏற்படுகிற உணர்வுகள் எப்படி இருக்கும்? சாக்கடைக் கால்வாயிலிருந்து வருகிற காற்றின் மணம் நாற்றமாக இருப்பது போலவே கறைபட்ட மனத்திலிருந்து வருகிற சிந்தனைகளும், செயற்பாடுகளும், சொல்லாட்சிகளும், குறைபட்டனவாகத்தானே தெரியும். தன் நெஞ்சம் என்றார், ஆன்மாவின் அருள் பெற்ற நெஞ்சம்தான் அறி என்றார்; அந்த ஆன்மாவின் உணர்வு என்றார். ஆன்மாவின் அருள் பெற்ற நெஞ்சத்தின் அருள்மிகு உணர்வுகள், குற்றங்களால் கொலையுண்டு கிடக்கின்றன. அங்கிருந்து வரும் அரக்கத்தனமான நிலைமையில் யாருக்கு என்ன பயன் கிடைக்கும்? தோற்றம் தருபவரும், தோற்றத்தில் மகிழ்பவரும், கடலில் அகப்பட்ட கட்டைபோல அலைந்தொழியத்தான் நேரிடும் என்று இரண்டாவது குறளில், இழுக்கத்தில் இருக்கும் துறவியின் இழிநிலையை விளக்கிக் காட்டுகிறார். 273. வலியில் நிலைமையான் வல்லுவரும் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. பொருள் விளக்கம்: வலிநிலை இல் = வலிமையும், உறுதியும் இழந்து மையான் = குற்றமே இழைக்கிற இருள் மனத்தவன் ஒருவன் வல்லுருவம் - விரைவாக வேடத்தை மாற்றிக் கொள்வதானது, பெற்றம் = எருது ஒன்று புலியின் தோல் = புலியின் தோலை போர்த்து = போர்த்திக்கொண்டு மேய்ந்தற்று = தகுதி பெற்றது போலாகும் சொல் விளக்கம்: வலி = வலிமை; நிலை = உறுதி மையான் = குற்றமிழைப்பவன்; வல் - விரைவாக உருவம் - வடிவம், வேடம்; மேல் = தகுதி.