பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 13) வஞ்சித்து = மக்களையெல்லாம் பொய் மாயத்தால் கபடமாடி வாழ்வாரின் துறவியாக வேடமிட்டு வாழ்வார் போல, == வன்கனார் இல் கொடுமையான திருடன் இவ்வுலகில் யாருமில்லை சொல் விளக்கம்: கண்ணார் = பகைவர்; கணன் - திருடன்; வன் கொடிய முற்கால உரை: நெஞ்சில் பற்று அறாது வைத்து, தானம் செய்வாரை வஞ்சித்து வாழும் அவர் போல், வன் கண்மையை உடையார் உலகத்திலில்லை தற்கால உரை: மனத்தில் பற்றற்ற தன்மை கொள்ளாமல், பற்றற்றவர்போல வஞ்சகமாகக் காட்டி வாழ்கின்றவரினும் கொடுமையானவர் எவரும் இலர். புதிய உரை: நினைவுகளில் துறக்காமல், துறந்தவர்கள் பெறுகிற பயன்களையெல்லாம் ஏய்த்துப் பெறும் துறவி வேடமிட்ட போலியைப் போல, கொடுமையான திருடன் உலகில் யாருமே இல்லை. விளக்கம்: தவவேட நெறி நில்லாதார் வேடம் பூண்டு என்ன பயன்? சிறிதும் ஞானமிலாதார் நீண்ட சடையும், தடை முடியும், தாடியும், பூணுாலும் பூண்டு, நடித்தால், கிடைக்கும் பயன் எத்தனை நாளைக்கு? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, ஏய்த்துப் பாழாக்கும் எத்தர்கள் வாழ்வு எத்தனை நாள் தொடரும்? 'நினைப்பும் மறப்பும் இலாத நெஞ்சம்தான் துறவியர் நெஞ்சம். வேட்கைகளை வெட்டி வீசியெறிந்தவர்கள் தான் துறவற ஞானிகள். செல்லும் அளவும் சிந்தையைச் செலுத்தி, சீண்டும் புலன்களை வெல்லும் வலிமை கொண்ட வல்லாளரே வீரத் துறவியர்.