பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 264 புதிய உரை: பரிசுத்தமான வா ழ்க் கையென்பது ஆசைப்படாத உடலால் அமையும். அதனைச் சார்ந்த மற்ற இன்பங்கள் எல்லாம் உண்மையாக வாழ்கிறபோது விரும்புவதுபோலவே தொடர்ந்து வரும். விளக்கம்: அவாதான் மனதை அழுக்காக்கி விடுகிறது. அந்த அசடுகள், அழுக்குகள், அகற்ற முடியாமல் போவதால், கசடுகளாக மாறி, மனிதரது உடலையும், உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்து விடுகிறது. மனதில் கசடற வாழ்வது மகானுக்குரிய பண்பு என்பார்கள். ஆனால், சாதாரண மனிதனும், அவாவை அழிக்க முயன்றால் நிச்சயமாக அழிக்க முடியுமென்று வள்ளுவர் நம்புகிறார். அந்த நம்பிக்கையைத்தான் இந்த நான்காவது குறளில் நயமாக உரைக்கிறார். இல்லத்தை அன்றாடம் நன்றாகக் கூட்டி குப்பைகளை வெளியேற்றுவதுபோல உள்ளத்தில் உண்டாகும் ஆசைக் கழிவுகளையும், அவாக்குப்பைகளையும் பெருக்கித் தள்ள வேண்டுமென்று உருக்கமாக இங்கே எடுத்துரைக்கிறார். 365. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் பொருள் விளக்கம்: அற்றவர் என்பார் = உலகப் பொருள்களை இச்சிக்காதவர்களே அவாஅற்றார் - அவாவை அடக்கியவராவார் மற்றையார் = இச்சிப்பதை கைவிடாத மக்கள் அற்றாக முற்றிலுமாக அற்றது இலர் - வெறுத்து விலக்கும் ஆற்றல் இல்லாதவராகிறார் சொல் விளக்கம்: அற்றவர் = இச்சைகளில் பற்றில்லாதவர் அற்றாக முற்றிலுமாக அற்றது - அழித்து முற்கால உரை: பிறவியற்றவரென்று சொல்லப்படுவார் அதற் குமேலே ஏதுவாகிய அவா அற் றவர்கள். பிறவேதுக்களற்று அறி தொன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவபோற் பிறவி அற்றிலர்.