பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உண்டு. அதை அடைய ஆசைப்படுகிறவன், பொருளைக் கவர விரும்பியவன் இறப்பான் என்கிறார். பொருளை வவ் வ விரும்பும்பொழுதே அவன் மனதாலும், உடலாலும் மேற்கொள்கிற ஒழுக்கத்தில் இறந்து போகிறான். இறப்பான் - இறப்பவன். இறப்பு என்றால் உயர்ந்த பொருள், மிகுதியானது என்பதால் இவனை இறப்பான் என்கிறார். முன்னர் தவறு செய்தபோது செத்தாருக்குச் சமமானவன் என்றார். இங்கே பொருளைக் களவாடுதல் எளிது என்று எய்துகிறபோதே, இறந்தவனாகிறான். அந்தப்பழி, பரம்பரைப் பழியாகிறது. அழியாது நிற்கும். சுட்டெரிக்கும் என்று 5 வது குறளில் அருமையாக விளக்குகிறார். 146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் பொருள் விளக்கம்: இல்லிறப்பான் = பிறர் பொருளை அபகரிப்பவன் கண் = அகத்திலும் புறத்திலும் பகை = உட்பகையும், வெளிப்பகையும் பாவம் = தீச்செயலும் அச்சம் = கலக்கமும் கவலைகளும் (ஆகிய) பழிநான்கும் - அவதூறுகளாகிய நான்கும் இகவாவாம் = எல்லையில்லாது பெருகிக் கொண்டே போகும். சொல் விளக்கம்: கண் - அகக்கண், புறக்கண்; இக = எல்லை கடந்த முற்கால உரை: பிறனில்லான்கண் நெறி கடந்து செல்வானிடத்து, பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் ஆகிய இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். தற்கால உரை: பிறன் மனைவியின் பாற் செல்பவனை விட்டு, பகை. பாவம், அச்சம், பழி எனும் நான்கும் நீங்கா.