பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I69 121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். பொருள் விளக்கம்: அடக்கம் = நினைவு ஒழுக்கமாகிய அடக்கம் அமரர் உள் = பகைவரிடத்தும் உய்க்கும் = பெருமையுடன் வாழ வைக்கும் அடங்காமெய் = (அடக்கமாகிய ஒழுக்கத்திற்கு) அடங்காத மெய்யும், அதைச் சார்ந்த வாய்மையும் (வாழ்கிற வாழ்க்கையில்) ஆரிருள் = (ஆர் + இருள்) பூமியில் துன்பத்தில் உய்த்து விடும் - ஆழ்த்தி அனுபவிக்கச் செய்துவிடும். சொல் விளக்கம்: அமரர் = பகைவர், தேவர்; தேவர் என்றால் = சான்றோர், அரசர், துறவியர்; உய்க்கும் = அனுபவித்தல், செலுத்துதல் ஆர் - பூமி; இருள் = மயக்கம், துன்பம், ஒளிமங்கி முற்கால உரை: அடக்கம் ஒருவனைத் தேவர் உலகத்திலும் அடங்காமை நரகத்திலும் செலுத்தி விடும். தற்கால உரை: ஒருவருக்கு அடக்கம் எப்பொழுதும் அருளையும், அடங்காமை துன்பத்தையும் தரும். புதிய உரை: அடக்கமானது பகைவர்கள் இடையேயும் பெருமை தரும். சான்றோர்களிடையேயும் வீற்றிருக்க வைக்கும். அடக்க மில்லாத மெய்யும் சொல்லும் பூமியிலே பெருந்துன்பத்தையே தந்து வாழ்வை ஒளியற்றதாக்கி விடும். விளக்கம்: மன ஒழுக்கத்தைத்தான் உயிர் ஒடுங்கி இருத்தல் என்கிறார்கள். அடக்கவும் காணுகிற ஆன்றோர்கள் போற் ற, பழிக்கவும் அழிக்கவும் துடிக்கின்ற பகைவர்களும் ஏற்று உவந்தேத்தி வாழ்த்துகிற சூழலை உண்டாக்கி விடுகிறது. பெருகி வரும் துன்பம்தான் நரகம் நிறைந்த இருள் (ஆர்.இருள்) மூடிய நோய் வாழ்க்கைதான் பேரிடி தரும் நரகம். ஆகவே, அடக்கத்தால் பெறுகிற மேன்மையையும் நோய்மையையும் வள்ளுவர் முதல் குறளில் கூறியிருக்கிறார்.