பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.10 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 24. புகழ் இல்லாதார் இரப்பர். இருப்பர் கொடுப்பர், நல்லோர்கள் புரப்பர். நயத்தோடு காப்பர். இந்த ஈர நெஞ்சின் நோன்புக்கும், மாண்புக்கும் தான் ஈகை என்று பெயர். நெருப்பென எரிக்கும் வறுமையை அணைக்கவும், அன்பால் அணைக்கவும் கூடிய ஆற்றலையே ஈகை என்றனர். ஈவதிலும் ஒழுக்கம் வேண்டும், மரபு காக்க வேண்டும், பெருமை சேர்க்க வேண்டும் என்னும் மேலாண்மையில் தான் புகழ் கிடைக்கும் என்பதனால் தான், ஈகைக்கு அடுத்த அதிகாரமாகப் புகழ் அதிகாரத்தை வைத்திருக்கிறார் வள்ளுவர். எதிர்பார்த்து வந்தவருக்கு இனிப்புச் சேதியாக உதவி, அவர் இதயத்தில் புகுவதைத்தான் புகழ் என்றனர். அதையும் புகல் என்றும் அழைத்தனர். விருப்பத்துடன், கொண்டாடிக் கொடுத்து, வீறு கொண்ட வறுமையை வெற்றி கொள்கிறபோது, பெறுகிற பேறு தான் புகழ் ஆகிறது. எப்படியெல்லாம் புகழ் வந்து சேரும்? அருஞ் செயல் ஆற்றுகிறபோது, வன்செயல்களை வென்று வாகை சூடுகிறபோது, எப்போதும் உள்ள வாழ்க்கையில் ஏற்றம் பெறுகிறபோது. மனத்தாலும் உடலாலும் மேம்பாடு காண்கிறபோது. தோற்றத்தில் பொலிவு கொள்கிறபோது. செயல்களில் சீர்த்தியும் கீர்த்தியும் பெறுகிறபோது. புகழ் பெறுவதற்காகப் பண்ணுகிற காரியங்கள், எண்ணுகிற சிந்தனைகள், மேற்கொள்கிற முயற்சிகள், முடிக்க முடியாமல் தவிக்கிற தவிப்புகள், இழக்கிற இழப்புகள், எதிரிகளால் ஏற்படுத்தப்படும் தடைகள், தகர்ப்புகள், வந்து வழிமறிக்கும் தடங்களால் உண்டாகும் தடுமாற்றங்கள். இவைகளுக்கும் மேலாக நின்று ஆற்றுகிற அருஞ்செயல்தான், ஈகைதான். வாகை மேடையில் வீற்றிருக்கச் செய்து, வளரும் புகழை வளைத்துத் தந்து, வாழ்த்துகிறது: வாழ்விக்கிறது.