பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 தமிழ்நூல் தொகுப்புக் கலை மறுப்புக்குப் பதில் குறுந்தொகை முன்னதா.பின்னதா? மற்றவற்றுள் முன் - பின் எது எது?-என்ற சிக்கல் எளிதில் அவிழ்க்கக் கூடியதே! சின்னவன்-பெரியவன்: ஒரு வீட்டில் உள்ள பெற்றோருக்கு (கணவன்-மனைவிக்கு) மூன்று பிள்ளைகள் உள்ளனர். வெளியில் போய் வந்த கணவன் மனைவியைப் பார்த்துச் சின்னபையன் எங்கே என்று கேட் கிறான். சின்னபையன்' என்பது எதை அறிவிக்கிறது? பெரிய பையன் ஒருவன் உள்ளான் என்பதை அறிவிக்க வில்லையா? 'சின்னபையன் பெரிய பையனோடு கடைக்குப்போயிருக்கிறான்' என்று மனைவி தெரிவிக்கிறாள். பெரிய பையன் இருப்பதனா லேயே இவன் சின்னபையன் என்று குறிப்பிடப்படுகின்றான். சின்னபையன் இருப்பதனாலேயே அவன் பெரியபையன் என்று குறிப்பிடப்படுகிறான். பின்னர், நடுவிலவன் எங்கே என்று கணவன் கேட்க, அவன் மாடியில் எழுதிக்கொண்டிருக்கிறான் என்ற பதில் மனைவியினிடமிருந்து வருகிறது. நடுவிலவன்', என்பது, அவனுக்கு முன்னாலும் - பின்னாலும் பிள்ளைகள் பிறந்துள்ளார்கள்-அதாவது-அவனினும்பெரியவனும்அவனினும் சிறியவனும் உள்ளனர் என்பதை அறிவிக்கவில்லையா? குட்டையன்- நெட்டையன்: இந்த நடைமுறை உலக வழக்காற்றிலிருந்து நூல் தொகுப்புக்கு வருவோம். குறுந்தொகை முன்னது எனின், அதற்குக் குறுந்தொகை என்னும் பெயர் எவ்வாறு வந்தது. நெட்டையன் இருப்பதால்தான் குள்ளன் குட்டையன் எனப்படு கிறான். குட்டையன் இருப்பதனால்தான் உயரமானவன் நெட்டையன் எனப்படுகிறான். இது போலவே, நெடுந் தொகை என ஒன்று இருப்பதால்தான், குறுந்தொகை என ஒன்று பெயர் பெற்றது-குறுந்தொகை என ஒன்று இருப்ப தால்தான், நெடுந்தொகை என ஒன்று பெயர் பெற்றது. இதைப் புரிந்து கொள்வதற்கு, நீண்ட எண்ணுதலோ (சிந்தனையோ) ஆராய்ச்சியோ தேலையில்லையே! நெடுந் தொகையும் குறுந்தொகையும் தொகுப்பதற்கு ஒரே நேரத்தில்