பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரு பாட்டியல் 395 கணக்கு, மேற்கணக்கு, பத்துப்பாட்டு ஆகியவற்றிக்கும் ஆசிரியர் பெயர் தெரியாத சில நூற்பாக்கள் இலக்கணம் கூறுவதால், இன்னவை, இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறல் என்ற முறையில், சங்க இலக்கியங்கட்குப் பிற்காலத்தில் இயற்றப்பட்டவை என்பது புலனாகும். கோவிந்தராச முதலியார், நூலுக்கு உரிய நூற்பாக்கள் சில- மேற்கோள் நூற்பாக்கள் சில என்று கூறியிருப்பினும், ஆசிரியர்கள் பலருடைய நூற்பாக்கள் இதில் ஒருங்கு தொகுத்துத் தரப்பட்டிருப்பதால் இந்நூல் ஒரு தொகை நூலாகும். இது பன்னிரு படலம் போல இலக்கணத் தொகை நூலானாலும், தொகைநூல் என்னும் இனம்பற்றி, தொகுப்புக் கலை, என்னும் இவ்வெளியீட்டில் இடம் பெற் றுள்ளது. சங்கப் புலவர்கள் பலர் பெயரால் உள்ள நூற் பாக்களின் தொகுப்பு நூலாயிருத்தலின், சங்கச் சார்புடைய -சங்க காலத்தையடுத்த - நூல்களின் வரிசையில் இந்நூலும் சேர்க்கப் பெற்றது. அடுத்த அறிமுகம்: இதுகாறும் இந்நூலின் இந்த முதல் தொகுதியில் பாடல் கலையின் சிறப்பு, உலக மொழிகளின் நூல் தொகுப்புக்கலை வரலாறு, தமிழ்மொழி நூல் தொகுப்புக்கலை வரலாறு ஆகியவை பற்றியும், தலைச்சங்கம் - இடைச்சங்கம் - கடைச் சங்கம் ஆகிய முச்சங்க காலத் தொகை நூல்கள் பற்றியும் சங்க காலத்தைச் சார்ந்த தொகை நூல்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இனி, இதையடுத்த இரண்டாம் தொகுதியில், இடைக் காலத் தொகை நூல்கள், பிற்காலத் தொகை நூல்கள், இருபதாம் நூற்றாண்டுத் தொகை நூல்கள் ஆகியவை ஆராயப்படும். தொகை நூல்கள் என்று வழங்கப்படும் தகுதி யுடையனவாய்த் தமிழில் இதுவரை ஏறக்குறைய இரண் டாயிரம் வெளியீடுகள் வந்துள்ளன எனலாம். இந்த எண்ணிக்கை சிலருக்கு ஐயமாகவும் வியப்பாகவும் இருக் கலாம். ஆனால் இஃது உண்மை. ஏறத்தாழ இவையனைத்தும் இயன்றவரை இரண்டாம் தொகுதியில் இடம்பெறக்கூடும்.