பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 577 இந்த ஐவரின் மொத்தப் பாடல்கள் 46 ஆகும். இவற்றுடன், இலக்குமணப் பிள்ளை இயற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழக வாழ்த்துப்பாடல் ஒன்றும், தமிழ்த் தாயைப் போற்றல்' (General) என்னும் பாடல் ஒன்றும் சேர்க்கப் பெற மொத்தம் 48 பாடல்களும் தமிழிசைப் பாடல்கள் - முதல் தொகுதி' என்னும் பெயருடன் வெளியிடப் பெற்றன. இதைப் பற்றிய விவரம் வருமாறு: முதல் தொகுதி பரிசுபெற்ற தமிழிசைப் பாடல்கள் ஐவர் இயற்றிய 48 பாடல்களின் தொகுப்பு. சுரதாளக் குறிப்பு: அண்ணாமலைப்பல்கலைக்கழக இசைக் கல்லூரி வீணை ஆசிரியர் கோமதி சங்கர ஐயர். பாடல் திருத்தம்: மு. அருணாசலம் பிள்ளை - பார்வை: கி.வ. பிள்ளை. அச்சு: பாண்டியன் அச்சகம், சிதம்பரம். பதிப்பாண்டு: முதல் பதிப்பு 1943; இரண்டாம் பதிப்பு 1958. இந்த முதல் தொகுதிக்கு, இசைக் கல்லூரி முதல்வர் கா. சுப்பிரமணியப் பிள்ளை 73 பக்கம் கொண்ட நீளமான முகவுரை எழுதியுள்ளார். இம் முகவுரையில் உள்ள சில குறிப் புகள் வருமாறு:- - பழந்தமிழ்ச் சங்க நூல்களில் முத்தழிழ் - இசைக் கருவிகள் ..இசைகள் பற்றிய பேச்சு. இசை நுணுக்கம் முதலிய இசை நூல்கள் இருந்தமை, ஆரிய நாகரிகத்தால் தமிழிசை அழிந் தமை. தியாகராசய்யர் தமது தாய்மொழியாகிய தெலுங்கில் பாடியவற்றையே இசையரங்கில் மற்றவரும் பாடுவது. வட மொழியிலும் பாடுவது. இறுதியில் இரண்டொரு தமிழ்ப் பாடலை ஆரவார வரவேற்புடன் பாடுதல். அண்ணாமலை செட்டியார் முதலியோர் தமிழ் இசை இயக்கம் தொடங்கல் - பலர் வரவேற்பு - சிலர் எதிர்ப்பு - மீறி வளர்ச்சி. - முத்தமிழ் என்பது போன்ற பாகுபாடு வேறு எம்மொழி யிலும் இல்லாமை. முதல் சங்கத்திலிருந்தே தமிழ் இசை இருந் தமை. பெருநாரை, பெருங்குருகு முதலிய இசை நூல்கள்