பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 தமிழ் நூல் தொகுப்புக்கலை விநாயகர் திரிவு வெண்பா அந்தாதி முதல் அரிச்சந்திர வண்ணம் முடிய 16 நூல்கள் உள்ளன. அல்லி மரைக்காயர் பிரபந்தக் கொத்து தொகுப்பு-வா. குலாம் காதிறு நாவலர். கலா ரத்ந அச்சுக் கூடம், சென்னை. ஹக்குப் பேரில் பஞ்ச ரத்தினம் முதல் நெஞ்சறிவுறுத்தல் வரை 10 நூல்களின் கொத்து இது. ஐதுறுக் நயினாப் புலவர் பாடல் திரட்டு தொகுப்பு-மமுது முகமதுப் புலவர் & அல்லாப்பிச்சைப் புலவர். வித்தியாவர்த்தன அச்சுக் கூடம், சென்னை. 1880. நயினாப் புலவர் பாடிய பல பாடல்களும் பல சிறு நூல்களும் இந்தத் திரட்டில் உள்ளன. கணபதி மாலை ஆசிரியர்- இ.ரா. குப்பாண்டிப் புலவர். தொகுப்புசுப்பிர மணியப் பிள்ளை. சிந்தாமணி யந்திரசாலை-1886. கணபதி பற்றிய பல சிறு நூல்களின் தொகுப்பு இது. மெய்ஞ் ஞானத் திருப்பாடல் திரட்டு ஆசிரியர் : ஷெய்கு முகியித்தின் மலுக்கு முதலியார் மாணவர் ஞானியார் சாகிபொலியுல்லா. சென்னை-கலா ரத்நாகரம் அச்சுக் கூடம். ஆங்கில ஆண்டு-1898. ஹஜரி 1316முஹர்ரம் மாதம். ஆசிரியர் வரலாறு: பிறப்பு - ஹஜரி 1167, இறப்பு - ஹஜரி 1209. ஊர்-திருக்கோடையம்பதி. இவரைப் பெற்றோர் கள் தவம் கிடந்து பெற்றனராம். இவர் பல அற்புதங்கள் செய்துள்ளாராம். ஆசிரியர் இயற்றிய பல தனிப் பாடல்கள்-பல நூல்கள் ஆகிய வற்றின் திரட்டு இது. இறுதியில் இவர்மேல் பாடப் பெற்ற மூன்று நூல்கள் உள்ளன. அவை ஆசிரியர் பெயருடன் வருமாறு: