பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை IO7 - - - o தற்கால உரை: தம்மைவிடத் தம்முடைய மக்கள் அறிவு உடையவராய் இருத்தல் பெற்றோர்க்கும், பிறர்க்கும் இன்பம் தருவதாகும். புதிய உரை: தம்மைத் தற்காத்துக் கொள்கிற பிள்ளைகளின் உண்மையறிவும், புலன் தெளிவும், மேன்மைமிக்க இந்த மண்ணின் உயிர்களுக்கு எல்லாம் இனியது. விளக்கம்: தந்தையின் வழிகாட்டுதலால் ஒழுக்கத்திலும், அறிவிலும், வலிமையிலும், சிறந்து விளங்குகிற மக்கள், தம்மைத் தற்காத்துக் கொண்டு வாழ்வதுடன், தன்னுடைய உண்மையை வலிமையை, அறிவுத் தெளிவை, புலனாற்றலை, மாநில மக்களுடன் பங்கிட்டுக் கொள்வது, எல்லார்க்குமே இனிய வாழ்வைத் தந்து வாழ்விக்கிற சிறப்பாகும். தம், தம் என்று இரண்டு முறை வந்திருக்கிறது. தம் என்றால், தற்காத்துக்கொள்வது. பங்கிட்டுக் கொள்வது என்ற இரு பொருட்களைத் தருமாறு பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அறிவுடைமை என்பது உண்மை. அறிவுடையனாதல் அறிவு என்பதற்கு அறிய வேண்டியவை என்றும் பொறி புலன் போன்ற பொருள்களும் உண்டு. ஒவ்வொரு மகனும் பெற்றோர்க்குப் புகழ் தரும் செயல் செய்வதுபோல, சுற்றியிருக்கும் மன்னுயிர்க்கும் சுகம் தரும் வாழ் வினைத் தருதல் வேண்டும். பயனுள்ள பெருவாழ்வு வாழவேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாகும். 69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய் பொருள் விளக்கம்: தன் மகனை = (தன்) ஆன்மாவாக விளங்குகிற தன் மகனை சான்றோன் = அறிவு, வலிமை, போன்ற ஒழுக்கங்களின் சாட்சியாகச் சிறந்தோன்; எனக்கேட்ட = என்று அறிய வருகிற தாய் = பெற்றவள் ஈன்றபொழுதினும் = பிறப்பித்த வேளையைக் காட்டிலும் பெரிதுவக்கும் = பெரிதும் மகிழ்வாள்