பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 தமிழ்நூல் தொகுப்புக் கலை கூட்டுறவு அரங்கக் கவிகள் தொகுப்பு - கிருஷ்ண தாசன். 204 பக்கங்கள். விலை ஒரு டாலர். ஆண்டு 1971. கிடைக்கு மிடம் - தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம், குவாலாலம்பூர். மலேசியா. 46 மலேசியக் கவிஞர்கள் பாடல்களின் தொகுப்பு. கூட்டுறவுத் தந்தை என அழைக்கப்படுபவர் துன் முத்து’ என்பவர். இவர், வீடு-இலக்கியம்-கலை முதலிய பல துறை, களிலும் கூட்டுறவு இயக்கம் காண்பவர். இவர் கவிஞர் கிருஷ்ண தாசரின் தலைமையில் மலேசியா நாடு முழுதும் பல கவியரங் கங்கள் நடத்தினார். அக் கவிதைகளின் தொகுப்பே இது. 1960-இல் சுத்தானந்தக் கவிக் குயில் வாழ்த்திப் பாடிய கவிதையுடன் தொடங்குகிறது. ப்ரிசு பெற்ற கவிதைகள்அரங்கில் பாடப்பெற்ற கவிதைகள் முதலியன அடங்கியுள்ளன. பரிசு பெற்ற ஒரு வெண்பாக் கவிதை வருமாறு: 'நாட்டுறவில் கூட்டுறவு காட்டின் பொருளியலில் கூட்டுறவு வீட்டுறவில் கூட்டுயர்வு - கூட்டுறவு கூறும் வளவியலில் கோதில் இலக்கியத்தில் சேரும் தொழிலியலில் சென்று” பல சாத்திரத் திரட்டு பல நூல்களின் திரட்டாகிய இது வீரசைவம் பற்றியது. ஆசிரியர்: புலிசை சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவா சாரிய சுவாமிகளின் மாணாக்கருள் ஒருவரின் தொகுப்பு - அவர் பெயர் தெரிவிக்கப்படவில்லை. உள்ளுறை: பரமாசாரிய சுவாமிகள் வாக்கு முதல் அவிநாசி நாதர் தோத்திரத் திரட்டுவரை 123 நூல்களிலிருந்து பாடல் கள் திரட்டப்பட்டுள்ளன. ஈசுவரனது தடத்தலக்கணம் முதல் சிவபோகம் வரையில்ான 73 பொருள்களைப் பற்றிய பாடல் கள் உள்ளன. மெய்யறிவு வ.உ. சிதம்பரனாரின் பாடல் தொகுப்பு இது. இதற்கு