பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: பகைவர்தம் பகை உணர்வை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளவும் நினைத்தால், அது தவ வலிமையால் முடியும். புதிய உரை: துறவற வாழ்வுக்கும் பொருந்தாத மனத்தினராய்க் கேடு செய்வாரது முயற்சியை அழிக்கவும், துறவற வாழ்வுக்கு விருப்பமானவரைக் காத்து உயர்த்தவும் கூடிய வலிமை, இலட்சிய நோக்கமுடைய தவத்தால் நிகழ்த்திட முடியும். விளக்கம்: தம்மை எதிர்ப்பாரைப் பகைவராகக் கருதுவதும், அவர்களை அழிக்க நினைப் பதும் ஆறறிவுள்ள மனிதர்களுக்கு கைவந்த கலையாகும். ஐந்தறிவு மிருகங்கள் தாம், எதிர்ப்பவைற்றை இப்படிச் செய்யும் என்றில்லை. எதிர்த்தால், அவர்களை உதிர்த்திடவேண்டும் என்ற வெறியைச் சாதாரண மக்கள் கொள்ளலாம். சாதுவாக மாறிவிட்ட துறவிகள் செய்யக் கூடாதல்லவா! அதனால்தான் ஒன்னாதவற்றை மட்டுமே ஒதுக்கித்தள்ள வேண்டும். கோபிப்பதும். கெடுப்பதும். அழிப்பதும் துறவிகளுக்கு வரக் கூடாதல்லவா! ஆகவே, தம் அற நெறிக்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் பொருந்தாதவரை, அவரது முயற்சிகளை அழிப்பது முதல்பணி. துறவறம் பூண வற்புறுத்தி அழைப்பது, ஒருவரது வாழ்வை அழிப்பதற்குச் சமம். ஆகவே, துறவற நெறியை விரும்புகிறவர்களுக்கு வழியமைத்து, காத்து, வளர்த்து வாழ்விப்பது இரண்டாம் பணி. இந்த இரண்டு பணிகளுக்கும் காய்தல் உவத்தல் இல்லாத மனம் வேண்டுமல்லவா! அந்தப் பொதுமனம், புது மனம் எப்போது வரும் தவ வலிமையால்தான் வரும். தவம் எனும் கொள்கையான இலட்சிய வேட்கையில் தான் எழும். அதனால்தான் தவத்தின் வரும் என்றார் வள்ளுவர் அதிலும், எண்ணின் வரும் என்றார். எண்ணமே துறவற வாழ்வாக, துறவற வாழ்வே எண்ணமாக இருக்கும் போதுதான். மனம் o i H. = - * o - == == —" H. 1_ rr _ --- ༈ - - -, ། * T – சிந்திக்கின்றதாக இருக்கும். அந்தச் சிந்தனைகளே へ செழுமையைத் தந்து முழுமையை வழங்கும் என்பத тэф,