பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 567 குடும்ப விளக்கு - நான்காம் பகுதியும் ஐந்தாம் பகுதியும் - வெளியீடு:பாரதிதாசன் பதிப்பகம்,புதுச்சேரி.விற்பனைஉரிமை: மலர் நிலையம், சென்னை. நவபாரத் அச்சகம் - சென்னை 1. நான்காம் பகுதி 'மக்கள் பேறு பற்றியது. இதில் மக்கள் பேறு முதல் திராவிட மக்கள் வாழிய வரை பல தலைப்பு கள் உள்ளன. சில உள் தலைப்புகளும் உண்டு. ஐந்தாம் பகுதி முதியோர் காதல் பற்றியது. மூத்த பிள்ளை முதியவரோடு என்னும் தலைப்பு முதல் நெடிய தூக்கம் நீடிய இன்பம்’ என்னும் தலைப்பு வரை பல பிரிவுகள் உள்ளன. சில உள் தலைப்புகளும் உண்டு. இசை யமுது - (1) இசை யரங்குகளில் பாடத்தக்க இசைப் பாடல்கள் கொண்டது இத்தொகுப்பு. வெளியீடு: பாரதிதாசன் பதிப் பகம், புதுச்சேரி - பழநியம்மா அச்சகம், புதுச்சேரி. பதிப் பாண்டு: பிப்ரவரி 1949. இதில், காதல், சிறுவர், தமிழ், பெண்கள் என்னும் நான்கு பெரும் பகுதிகள் உள்ளன. வண்டிக்காரன் என்னும் தலைப்பு முதல் அச்சம் தவிர் - மடமை நீக்கு என்னும் தலைப்பு வரை பல தலைப்புகள் உள்ளன. சில உள் தலைப்பு. களும் உண்டு. இசை யமுது-(2) இசையமுது நூலின் மற்றொரு பதிப்பு இது. வெளியீடு பாரி நிலையம், சென்னை, அச்சு: நவபாரத் அச்சுக்கூடம்: சென்னை. பாரி நிலையத்தார் பதிப்புரையில், 'புதுவைப் பாரதசக்தி நிலையத்தாரிடமிருந்து முழு உரிமை பெற்றுத் தற்பொழுது இசையமுது எங்கள் நிலையம் வாயிலாக வெளிவருகிறது...' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பிலும், காதல் பகுதி, சிறுவர் பகுதி, தமிழ்ப் பகுதி, பெண்கள் பகுதி என்னும் நான்கு பெரும் பிரிவுகள்