பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 தமிழ் நூல் தொகுப்புக் கலை சென்று இறைவன் மேல் பாடல்கள் பாடினார். இந்தப் பாடல் களின் தொகுப்பே திருவாசகம் என்பது. தொகுப்பாசிரியர் திருவாசகப் பாடல்களை ஒரு நூலாகத் தொகுத்த தொகுப்பாசிரியர் யார் என்று தெளிவாகத் தெரியவில்லை. மாணிக்க வாசகரே தொகுப்பாசிரியராக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்தக் காலத்தில், பல நாட்களில் - பல தலைப்பு களின் கீழ் எழுதப்பட்ட புல உதிரிப் பாடல்களை, எழுதியவரே தொகுத்து இன்னார் கவிதைத் தொகுப்பு என்று பெயரிட்டு வெளியிடுவது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. மாணிக்க வாசகர் தில்லையை அடைந்திருந்தபோது, சிவன் ஓர் அந்தண முனிவராய் வந்து, திருவாசகப் பாடல்க்ள் அனைத்தையும் மாணிக்க வாசகரைச் சொல்லச் செய்து தம், கையாலேயே அனைத்தையும் எழுதி, இறுதியில், “மாணிக்க வாசகர் சொல்ல அழகிய திருச்சிற் றம்பல முடையான் எழுதி யது” எனத் தம் கைச்சாத்தும் இட்டுத் தில்லைப் பொன்னம் பலத்திலுள்ள பஞ்சாக்கரப் படிமீது வைத்தான் - என்று கதை சொல்லப்படுகிறது. பாடல் எண்ணிக்கை திரு வாசகத்தில் சிவபுராணம்' என்பது முதல் அச்சோப் பதிகம் என்பது ஈறாக ஐம்பத்தொரு தலைப்புகள் உள்ளன. பாடல்களின் மொத்த எண்ணிக்கை 658 ஆகும். சில தலைப்பு களில் பின்வருமாறு சில பாடல்கள் குறைந்துள்ளன: திருவுந்தியார், திருப்பூவல்லி என்னும் பகுதிகளில், 20 பாடல்கள் இல்லை; ஒன்று குறைவாக 19 பாடல்களே உள்ளன. திருப்புலம்பவில் 3 உள; 7 குறைவு. திரு வெண்ணப் பதிகத்தில் 6 உள; 4 குறைவு. திருப்படை எழுச்சியில் 2 உள; 8 குறைவு. திருப்படையாட்சியில் 8 உள; 2 குறைவு. பண்டாய நான் மறையில் 7 உள; 3 குறைவு. ஆனந்த மாலையில் 7 உள்; 3 குறைவு. அச்சோப் பதிகத்தில் 9 உள; குறைவு. இந்தக் குறைகளையும் சேர்த்தால் திருவாசகத்தில் மொத்தப் பாடல்கள் 688 இருக்கும். பிரார்த்தனைப் பத்திலும் திரு