பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்பது அந்தப் பகுதி: நெடுந்தொகை நானூறு' என்னும் பெயர் பரவலாக வழக்காற்றில் இருந்தது என்பதற்கு இஃது ள் எடுத்திக் க்ாட்டாகும். அகநானூறு: - - நெடுந்தொன்க, நானூறு பாட்டு உடைமையால், நெடுந் - தொகை'நாஞ்ாறு. என் முற்க்ாலத்தில் அழைக்கப்பட்டது போல, அகநானூறு' எனப்பிற்காலத்தில் அழைக்கப்படலா யிற்று. பல்ழ்ய அகநானூற்று ஒலைச்சிவடி யொன்றில், இறுதி யாகப் பாயிரச் செய்யுட்களும் முடிந்த பிறகு, அகநானூறு முடிந்தது எனப் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, பல நூற்றாண்டுகட்கு ឃ្លាទី៤, அகநானூறு என அழைக்கும் வழக்காறு தோன்றிவிட்டது என உணரலாம். --- அகம்: f இனி'அகநானூறு 'அகம்' என்னும் சுருக்கப் பெயரால் சுட்டப்பட்டிருப்பதற்குச் சில எடுத்துக்காட்டுக்கள் வருமாறு:தொல்காப்பியம்-உவம இயலின் இறுதி (37 - ஆம்) நூற்பா வின்கீழ்ப் பேராசிரியர் வரைந்துள்ள, "... அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிற சான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்ற மாகா ...”- - என்னும் உர்ைப்பதியில் நெடுந்தொகை நூல் ‘அகம் எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளமை காண்க. உரையிடையே (உதாரணமாக) மேற்கோள் செய்யுட்களை நூற்பெயருடன் எடுத்துக் காட்டுவதில் தலைசிறந்தவர் நச்சினார்க்கினியர். இவர் ஏறக்குறையப் பத்து இடங்களிலும் அகநானூற்றை 'அகம்' என்னும் பெயரால் வழங்கியுள்ளார் எனலாம்.எடுத்துக் காட்டாகத் தொல்காப்பிய அகத்திணையியல் உரையி லிருந்து மூன்று இடங்களைக் காண்போம், கொண்டுதலைக் கழியினும் என்று தொடங்கும் (தொல்-அகம்-15) துற்பாவின் கீழ், வேனிற் பாதிரிக் னிே மாமவர்" என்று தொடங்கும் அக நானூற்றுப் (257) பாடலை முழுதும் தந்து, அந்தப் பாடலின்