பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் பொருள் விளக்கம்: தினைத்துணை = மிகச் சிறிய அளவு நன்றி செயினும் - இன்பம் தரத்தக்க உதவி செய்தாலும் பயன் = அந்த உதவியின் மதிப்பை தெரிவார் = மணமறிய தெரிந்து கொண்டவர். பனைத்துணையாக - மிகப் பெரிய உதவியாக கொள்வார் = (பற்றி) வளர்த்துக் கொள்வர் சொல் விளக்கம் தினை = மிகச் சிறிய, துணை = அளவு பனை = மிகப் பெரிய, கொள் - மனத்திலே கொள்ளுதல் தெரிவார் = மணமறிதல், விளக்கமறிதல் முற்கால உரை: தினையளவு நன்றி செய்தாலும் பனையளவு நன்றியாகக் கொள்வர் பெரியோர் என்பதாம். தந்கால உரை: உதவியின் பயனை நன்று அறிந்தவர்கள் சிறிய உதவியாக இருந்தாலும் அதனைப் பெரியதொரு உதவியாகக் கொள்வார்கள். புதிய உரை: இன்பம் அளிக்கக்கூடிய சிறிய உதவியையும் மிகப் பெரியதாக மனத்திற்குள் வைத்து, அதை மேலும் வளர்த்துப் பயன் பெறுவார்கள், மனமறிய தெரிந்து கொண்ட பயனாளர்கள். விளக்கம்: உதவியைத் தினை அளவு என்றும் பனை அளவு என்றும் குறிப்பிட்ட கருத்தை அனைவரும் ஏற்றிருக்கின்றனர். உதவியை ஐம்புலனால் ஏற்றுக் கொள்ளுதல் முதல் நிலை. அதனை மனத்தில் நினைத்தல் இரண்டாம் நிலை. அதை மறக்காது மனதிலே ஏற்று நிலையாய் வைத்து நெறியாய் வளர்த்துக் கொள்வது மூன்றாம் நிலை. அதனால்தான் கொள்வார் என்றார். கொள்வார் என்றால் கற்பார் என்றும் அர்த்தம். தெரிவார் என்றால் மனமறிய விளக்கம் ஆதல், அதாவது உதவியை ஏற்று அதைப் புரிந்து கற்று தெரிந்து, வளர்த்து மகிழும் பயனாளர் என்பதை 4 வது குறளில் விளக்குகின்றார்.