பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 407 16,000 என்னும் தொகையை 11 என்னும் எண்னால் பெருக்கினால் 1,76,000 பாடல்கள் என்னும் தொகை கிடைக் கிறது. இது நம்பத்தக்கதா? ஆனால், செல்லரித்தது போக, அறையிலிருந்து தூய்மை செய்து எடுத்தபோது, 384 பதிகங் களே தேறியதாக அதே புராணம் கூறுகிறது. "பண்புற்ற திருஞான சம்பந்தர் பதிகம் முந்நூற்று எண்பத்து நான்கினால் இலங்குதிறம் முறைமூன்று' (25) என்பது பாடல் பகுதி. தேவாரப் பாடல்கள், பாடிய கால வாரி யாகவோ, சென்ற இடவாரியாகவோ தொகுக்கப்படாமல், பண்கள் வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதனைத் திரு முறை கண்ட புராணமே கூறியுள்ளது. சம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன அல்லவா? அவற்றுள், முதல் திருமுறை 1469 பாடல்கள் அடங்கிய 136 பதிகங்களையும், இரண்டாம் திருமுறை 1331 பாடல்கள் அடங்கிய 122 பதிகங்களையும், மூன்றாம் திருமுறை 1358 பாடல்கள் அடங்கிய 126 பதிகங் களையும் முறையே கொண்டுள்ளன. மூன்றாம் திருமுறையின் இறுதியில் உள்ளதான 126 ஆவது பதிகம் திரு விடை வாய்" என்னும் திருப்பதியைப் பற்றியது. இந்தப் பதிகம் தில்லை யில் இராசராச சோழன் முயற்சியால் வெளியானவற்றைச் சேர்ந்ததன்று. கல்வெட்டில் இப்பதிகம் பொறித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இத்தொகுதியில் சேர்க்கப்பட்டதாகும். முதல் திருமுறை, நட்ட பாடை - தக்கராகம் - பழந்தக்க ராகம், தக்கேசி - குறிஞ்சி - வியாழக் குறிஞ்சி - மேகராகக் குறிஞ்சி - யாழ்முரி - என்னும் எட்டுப் பண்கள் வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் திருமுறை. இந்தளம் - சீகாமரம்-காந்தாரம் - பியந்தைக் காந்தாரம் - நட்ட ராகம்செவ்வழி - என்னும் ஆறு பண்கள் வாரியாகத் தொகுக்கப் பட்டுள்ளது. மூன்றாம் திருமுறை, காந்தார பஞ்சமம் கொல்லி, கொல்லிக் கெளவாணம்-கெளசிகம் - பஞ்சமம் - சாதாரி - பழம் பஞ்சுரம் - புற நீர்மை - அந்தாளிக் குறிஞ்சிஎன்னும் பண்கள் வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பண்முறைத் தொகுப்பாகும்.