பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - - - ஆனால், தொடர்ந்து பயனை அளித்துக் கொண்டே வருகிற வினை, அதிலும் தீமைகளையே தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டு முடிகிற தீவினை, அதன் பயன்கள், செய்தவனை விடாது. நீங்காது. சுற்றிச் சுற்றியே வரும். அந்த நிலையைத்தான், வியாது என்னும் சொல்லில் பொறித்துக் காட்டுகிறார். i என்றால், சாவு என்று பொருள். அந்தத் தீவினையின் விளைவுகள் காலத்தால் சாகாது. செய்தவனை விட்டுப்போகாது. செய்த வினைக்குத் தண்டனை தராமலும் அது விடாது. வினைக்காரனை வருத்தும், உறுத்தும், வதைக்கும், நலிய வைக்கும், நாளெல்லாம் நிம்மதியை அழிக்கும். இப்படியாக அவனைக் கொல்லாமல் கொல்லும் என்பதைத்தான் அடும் என்றார். தீவினை செய்ய, சுற்றமும் நட்பும் சூழலாக இருந்திருக்கலாம். என்றாலும், அவர்கள் நேரடியாக ஈடுபடவில்லை என்பதாலோ என்னவோ, அவர்கள் பிழைத்துப் போவர் , தப்பித்து மீள்வர் என்று கூறுகிற வள்ளுவர், தவறுக்குத் தண்டனை நிச்சயம். அதிலும் தீய குற்றத்திற்கு நிந்தனை நிறைந்த தண்டனைகள், உண்டு. இது உடலால் பெறுகிற அழிவு உறுப்புக்கள் பெறுகிற சிதைவு வாழ்வுக்கு வருகிற இழிவு என்று 7 வது குறளில் தீவினைகள் திண்ணமாய்த் தரும் தண்டனையின் தீவிரத்தைக் காட்டியிருக்கிறார். 208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வியாது அடிஉறைந் தற்று பொருள் விளக்கம்: தீயவை செய்தார் = பிறருக்கு தீபோன்ற குற்றங்களைச் செய்பவர் கெடுதல் = பதனழிந்து, சிதைந்து அழிந்து போவர் (என்பது) நிழல்தன்னை = துன்பம் செய்தவரைப் புகலிடமாக வைத்து, வீயாது = (அவரை விட்டு) நீங்காது அடி = தாக்கிக் கொல்லும் வண்ணம் உறைந்து அற்று = இறுக்கமாகி, இல்லாமல் ஆக்கிவிடும். சொல் விளக்கம்: கெடுதல் = பதனழிதல், உருவழிதல், சிதைதல், வீதல் நிழல் = புகலிடம், நீதி, துன்பம்; வியாது = நீங்காது, அழியாது அடி = தாக்கு, கொல்லு; உறைந்து = இறுகி, அற்று இல்லாமல்