பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I77 அடக்கமான வாழ்வுக்கு நா அடக்கம்தான் முக்கியம். வயிற்றைக் குறைத்தால் வாழ்வு சிறக்கும். சுவை ஆசையைக் குறைத்தால் சுகம் வளரும். ஆகவே, நாவடக்கக் கற்றுக்கொள் என்று ஐந்தடக்கல் என்று கூறி, அறிவே! தலையாய பகையான நாவைக் கட்டுப்படுத்து என்று 7வது குறளில் கூறுகிறார். 128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகாது ஆகி விடும். பொருள் விளக்கம்: தீச்சொல் = சேர்ந்தாரைக் கொல்லுகின்ற தீ போன்ற சொல். ஒன்றானும் = ஒன்றாக சொல்தான் ஆனாலும் பொருட் பயன் உண்டாயின் = அதனால் உடலுக்கு பலன் கிடைத்திருக்கலாம். (அது) நன்றாகாது - அவரின் மனதுக்கு சுகமோ நன்மையோ தராமல் சொல்விளக்கம்: தீ = சேர்ந்தாரைக் கொல்லி, பொருள் = உடல். நன்றாகாது = சுகம், நன்மை தராது. முற்கால உரை: - - கொடுஞ்சொல் ஒன்று உண்டாயின் அவனுக்கு நன்மை உண்டாகாது. தற்கால உரை: நல்ல சொற்களிடையே ஒரு தீய சொல்லைக் கலந்து பேசினாலும் பேச்சில் உள்ள பிற நன்மைகளும் தீயவையாகக் கருதப்படும். புதிய உரை: சுட்டெரிக்கும் கொடுஞ் சொல் ஒன்று பேசுகிறபோது, உடலுக்குப் பலர் பெறக்கூடிய பலன் கிடைக்கலாம். ஆனால், மனத்துக்கு நன்மையும் சுகமும் தரக்கூடிய எதுவும் ஆகிவராமல் போய் விடும். விளக்கம்: ஏழாவது குறளில் நாவின் முதல் பணியான சுவை ரசத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கினார். எட்டாவது குறளில் நாவின் இரண்டாவது பணியான சொல்லால் ஏற்படும் தீமை பற்றிக்