பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுந்தொகை - 227 கீழ்) "இது கொண்டுதலைக் கழிதற்கண் தலைவன் நடையை வியந்தது இஃது அகம்'- - என அகநானூற்றை 'அகம்' என்று சுட்டியுள்ளார். அடுத்து - தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி, என்று தொடங்கும் (தொல் - அகம் - 36)நூற்பாவின்கீழ், 'ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், என்று தொடங்கும் அகநானூற்றுப் (35) பாடலை முழுதும் தந்து, அப்பாடலின்கீழ், : . - "இவ்வகம் (அகம்) தலைவன் மிகவும் அன்பு, துெய்க வென்று தெய்வத்திற்குப் பராஅயது'- - - என நெடுந்தொகைப் பாடலை அகம்'எனக் கூறியுள்ளார். இன்னும் ஒன்றே ஒன்று! 'தலைவரும் விழும ,ിഞഖമ1ര് துரைப்பினும் என்று தொடங்கும் (.ொதல்-அகம்-39) நூற்பா வின் கீழ், வேலும் விளங்கின விளையரு மியன்றனர்' என்று தொடங்கும் அகநாநூற்றுப் (259) பாடலை முழுதும் தந்து, அதன் கீழ், - . 'இவ் வகம் போக்குதற்கண் முயங்கிக் கூறியது" - - என அகநானூற்றை 'அகம்' என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இன்னும் பல இடங்கள் உள. எட்டுத் தொகை நூல் கள் இன்னின்ன என்று கூறுகிற, 3 = 'நற்றிணை நல்ல குறுந்தொகை.ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு.அகம்புறம் என்று' இத்திறந்த எட்டுத் தொகை . என்னும் பழைய பாடலிலும் 'அகம் எனக் குறிப்பிடப்பட்டுள் ளமை காண்க. அகநானூற்றின் பாயிரப் பகுதியின் இறுதியில் அந்நூலின் தொகுப்பு முறையைப் பற்றிக் கூறுகிற, - பாலை விய மெல்லாம் பத்தாம் பனிநெய்தல் நாலு நளி முல்லை நாடுங்கால்-மேலையோர் தேறும் இரண்டெட்டிவை குறிஞ்சி செந்தமிழின் ஆறு மருதம் அகம் என்னும் பாடலும் அகம்' எனத் குறிப்பிட்டிருப்பது காண்க علي