பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தமிழ் நூல் தொகுப்புக் கலை பேராசிரியர் உரையிலும் சான்று உள்ளது. செய்யுளியலில் (149) அவர் எழுதியுள்ள, “...இனி, நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும் எனச் சங்கத்தார் தொகுத்தவற்றுள் ஒன்றனை யில்லை யென்றார்; அஃதிக்காலத்தினும் வீழ்ந்த தின்மையின் அவ ரிலக்கணத்தினை வழுப்படுத்த தென்பது...' கலித்தொகை, பரிபாடல் முதலிய தொகை நூல்களைக் கடைச் சங்கத்தார் தொகுத்தனர் என்பதைப் பேராசிரியரின் உரைப்பகுதி நன்கு தெளிவுபடுத்தி யுள்ளது. எனவே, எட்டுத் தொகை நூல்கள் கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண் டில் தொகுக்கப்பட்டன என்று சிலர் கூறுவது பொருந்தாது எனத் தெளியலாம். இதனை இன்னுந்தான் சிறிது ஆராய்ந்து காண்போமே! - எட்டுத் தொகை நூல்களின் இறுதியில் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், எட்டிலும் இந்த அமைப்பு இல்லை. இரு நூல்களில் தொகுத்தவர் பெயர் மட்டிலும், ஒரு நூலில் தொகுப்பித்தவர் பெயர் மட்டிலும், இரு நூல்களில் இருதரத்தார் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன; மூன்று நூல்களில் இரண்டுமேயில்லை. இதுபற்றிய விவரம் வருமாறு:- - நெடுந்தொகையைத் (அகநானூற்றைத் தொகுத்தவர் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவர் -அதாவது - தொகுக்கும்படி தூண்டியவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இதனை, இந்நூலின் இறுதியில் முன்னோராலேயே எழுதப்பட்டுள்ள, - “இத் தொகைப் பாட்டிற்கு அடியளவு சிறுமை பதின் மூன்று, பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தர்ன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, தொகுத்தான் மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என் பான்' என்னும் பகுதியால் அறியலாம். அடுத்து,-குறுந் தொகை.