பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 463 கைவிட்டுவிடுதல். அதாவது ஒழுக்கம் விட்டு விலகவே, உடல் நிலை மோசமாகி, நாசமாகி அழிகிறது. இதைத்தான் தெய்வம் நின்று கொல்லும் என்றனர். உடம்பு எனும் ஆலயத்தின் உள்ளே குடியிருக்கும் ஆன்மாவான உயிர் எனும் தெய்வம், (தெய் = தண்டித்தல்), தவறு செய்கின்றவரின் உடலை, கொஞ்சங் கொஞ்சமாகத் தண்டிப்பதையே நின்று கொல்லும் என்றனர். நின்று கொல்வதைத்தான், தள்ளும் என்றார். குன்றும் என்றார். ஆனால், கள்ளாதார் மனமானது கபடு இன்றி இருத்தலால், சுவாசம் அம்சமாக அமைந்து விடுவதால், அவரின் உடல் பலமாக மாறுகிறது. அந்தப் பலமான உடலில் பலமான மனம், பக்குவமான குணம் அமைகிறது. அந்த அற்புத மனிதரை, அவர் வாழும் அதிசய வாழ்வைக் காணுகிற விருந்தினராகிய புதிய மனிதர்கள், சுற்றியே வாழ்ந்திருக்கும் சுற்றத்தார்கள். அறிவில் சிறந்த பெரியோர்கள், உயர்ந்தோர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். வாழ்த்தி மகிழ்கின்றனர். வரவேற்றும் புகழ்கின்றனர். எல்லோரின் வாழ்த்தும், போற்றுதலும், அவரை ஒரு புதுமை நிறைந்த வாழ்வை பூரிப்புடன் வாழ உதவுகிறது. உற்சாகம் ஊட்டுகிறது என்று கள்ளாமை அதிகாரத்தை வள்ளுவர் முடித்து வைக்கிறார்.