பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை - 231 அஃதிலார் இல் = அப்படிப்பட்ட செயல் உடையவர்களும் இல் = இல்லை என்றும் சொல்வதற்கில்லை. சொல் விளக்கம்: அழுக்கற்று = மனம் மாசு, களங்கம், அழுக்கு நீங்கி, பொறாமை அகன்றார் = பரிபூரணமாக; பெருக்கம் = வளர்ச்சி, செல்வம், பேறு; தீர்ந்தார் = தைரியமானவர், துறந்தவர்; இல் = இல்லை முற்கால உரை: - அழுக்காற்றைச் செய்து பெரியாராயினாரும் இல்லை. அச்செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாருமில்லை. தற்கால உரை: பொறாமையால் வளம் பெருகப் பெற்றாரும் இல்லை. பொறாமை படாமையால் வளம் சுருங்கி வறுமை அடைந்தாரும் இல்லை. புதிய உரை: மனம் மாசுபட்ட களங்கத்துடன் பரிபூரண வாழ்வு பெற்றவரும் இல்லை. மனம் மாசின் மூலம் வளர்ச்சி பெற்றவர்கள், தைரியமாக வாழ்ந்ததும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் உலகில் இல்லை என்றே கூறலாம். விளக்கம்: குற்றம் செய்பவன் மனிதன். அவனது மனம் அழுக்குகளால் நிரம்பப் பெறுகிறது. அந்த அழுக்குகளுள்தலையாயது பொறாமை. அது மனத்துக்கு மாசு மட்டுமல்ல. களங்கத்தைக் கொடுத்து மனக் கோட்டத்தையும் விளைவித்து, உடலைக் கெடுத்து, மனத்தைச் சிதைத்து வாழ்வை அழித்து விடுகிறது. அதனால்தான அழுக்காறு உள்ளவர்கள் தாம் மனிதர்கள். அவர்கள் தமது அறிவாற்றல் மூலம் அவற்றை ஒதுக்கித் தள்ளி உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும். உயர்ந்த வாழ்வு என்பது பணம், பதவி, வீடு, மனை, அதிகாரம் என்பதில் அல்ல. மனம் உயர்ந்தால், நிமிர்ந்தால், மாண்புகள் நிறையும். மகிழ்ச்சிகள் குவியும். ஆகவே அழுக்காறு கொண்டு உயர்ந்தவர்கள் இல்லை. அழுக்காறு இல்லாமல் அழிந்தவர்கள் இல்லை என்று கூறி. அழுக்காறு கொண்ட மனம் பரிபூரண நிம்மதியுடன் இருக்காது. தைரியமாகவும் செயல்படாது. அச்சத்துடன் எச்ச வாழ்க்கையே வாழ முடியும் என்ற முத்தாய்ப்புடன் இந்த அதிகாரத்தை முடிக்கிறார் வள்ளுவர்.