பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உடல், மனம், உயிர் ஒன்றியதன் பயனால் பாராட்டப்படுகிற அன்பானது, அமைதியை வழங்குவதால், அந்த அமைதியே அவர் பெறுகிற வாழ்வுப் பயனாக அமைந்து விடுகிறது. ஒருவருக்குக் கிடைக்கிற புகழ், பொருள், சுற்றம், நட்பு இவற்றை விட மனத்துக்கு அமைதி கிடைக்கிறது என்னும் மகத்துவத்தை அன்பு தருகிறது என்பதாக 5 வது குறளில் கூறுகின்றார். 76. அறத்திற்கு அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை பொருள் விளக்கம்: அறத்திற்கு உடல் காக்கும் ஒழுக்கம், ஞானம், நோன்பு போன்ற நல்வினைகளுக்கு மேலும் நிறைவூட்ட அன்பு சார்பு என்ப = அன்புதான் உதவி, துணை புரிகிறது வறியார் = வெறுமை கொண்ட உடலும் குறைவான மனமும் கொண்டவர்களது மறத்திற்கும் உடல் நலிவு உண்டாக்கும் சினம், பாவம், பிணக்கு, வம்பு போன்ற தீச்செயல்களைத் தடுக்க அஃதே துணை = அதே அன்புதான் தீர்வு காண்கிறது. முற்கால உரை: சிலர் அறியாதவர் அன்பு துணையாவது அறத்திற்கே என்பார். மறத்தை நீக்குவதற்கும் அவ்வன்பே துணையாம் என்பதாம். தற்கால உரை: அன்பானது நன்மையை உருவாக்கவும், தீமையைப் போக்கவும், உறுதுணையாக இருக்கும். புதிய உரை: அதாவது உடல் காக்கும் குணங்களான அன்புதான் ஒழுக்கத்தை, ஞானத்தை, வைராக்கியம் மிக்க நோன்பினை, வளர்த்து மேலும் மெருகூட்டுகிறது. உடல் அழிக்கும் குணங்களான சினம், பாவம், பிணக்கு, வம்பு போன்ற தீம்புகளைத் தீய்த்து தகுதியாளராக மாற்றவும் அன்புதான் உதவுகிறது: உற்றுழிதுணை வருகிறது. விளக்கம்: அன்பு அமைதியை மட்டும் வளர்த்து உதவவில்லை. இனிய வாழ்வுக்கு அவசியமான ஒழுக்கத்தை, நல்லறிவை, நல்ல செயல்களை வளர்த்துக் கொள்ள உற்சாகம் ஊட்டுகிறது. அதே