பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 தமிழ்நூல் தொகுப்புக் கலை மத நிராகரணம், நன்னெறி, சிவநாம மகிமை, தல வெண்பா, இட்டலிங்க அபிடேக மாலை, நெடுங் கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சீகாளத்திப் புராணம் - இடைப்பகுதி - ஆகியன. இவற்றுள் சில நூல்களை மேலும் பலர் வெளியிட்டுள்ளனர். R, 4827. குலால முனி பாடல்கள் ஆ-குலால முனி. இத்திரட்டில், கனாப் பாட்டு, சிவகாமி வல்லி பாகர் ஊசல் பாட்டு, கலைமகள் துதி, மங்கள வாழ்த் துப் பாடல் - முதலியன உள்ளன. முதல் பாடல் மட்டும் முற்றும் இல்லை. முதல் கனாப் பாட்டில் மாதிரிக்குச் சில அடிகள் வருமாறு; “ஆதி யமுதமே அன்ன நடை மானே தோழி நான் கண்ட கனவின் நலங் கேளாய் பைங் தோகை போல் வாழும் பால்மொழி யாளே எம்தோழி சொல்ல நான் கண்ட கனா நல்ல கனா என்னையும் பேசிப் பின்னே என் தங்கை தான் பேசி ... ... ...' என்று பாடல் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியிலுள்ள மங்கள வாழ்த்துப் பாடலின் முதல் மூன்று அடி மட்டும் வருமாறு:- * "ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில்போ லன்ன சுற்றம் முசி (முறி)யாமல் வாழ்ந்திருப்பீர்-என்றும் இருப்பீர்” என்பது பாடல். ஆல மரம், அரசர் பெரும் படையுடன் தங்கும் அளவுக்குப் பரந்து விரிந்து தழைத்திருக்கும் என்பது பலரும் அறிந்த செய்தி. அறுகம்புல், மேலே கருங்கல் சக்கை போட்டுத் தார் ஊற்றினாலும்-கொடிய கோடைக்குப் பின் மழை தூறி யதும் மீண்டும் முளைத்து மேலே வந்து விடும் என்பதும் பல ரும் அறிந்த செய்தியே. ஆனால் மூங்கில் பற்றிச் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மூங்கில் ஒராண்டுக்கு ஒரு முறையோ அல்லது சில-பல ஆண்டுகட்கு ஒரு முறையோதான் பூக்கும்.