பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I56 + டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - н пши 12. நடுவுநிலைமை நடு +உ + நிலை + மெய் என்ற நான்கு சொற்களால் ஆன இந்தச் சொல், நான்கு வகையாக விளங்கும் இந்த உலக மக்களுக்கு, இருக்க வேண்டிய இயல்பான ஒழுக்கத்தைப் போதிக்கும் நீதிச்சொல்லாகப் பரிணமித்திருக்கிறது. நடு என்றால் சமன், கடவுள் வானத்தின் உச்சி என்றும்; உ என்றால் அகத்தையும் புறத்தையும் சுட்டுவது என்றும்; நிலை என்றால் உலகம், உறுதி, திண்மை, நீதி, வாய்மை என்றும் பொருள் இருப்பதால், நாம் இப்போது ஒரு நல்ல பொருளைப் புரிந்து கொள்ளலாம். உற்றார், நண்பர், அயலார், பகைவர் எனும் பிரிவுக்குட்பட்ட மக்களிடையே வாழும் மனிதனாகிய ஓர் அறன் அவர்களிடத்தில், அதாவது ஒரு சாராரிடையே ஒன்றிப் போய் விடாமல், கூட்டத்தைக் கண்டு பயந்து அவர்களுடன் கலந்துபோய் விடாமல், உறுதியாகத், திண்மையாகக், கடவுள் போல வானத்தின் உச்சியிலே நிற்பது போல நின்று, பழகிட வேண்டும். வாழ்ந்திட வேண்டும். செயல்பட வேண்டும். உள்ளும் புறமும், அதாவது ஐம்புலனால் அறிகிற அறிவிலும், சிந்திக்கிற சிந்தையால் பெறுகிற தெரிவிலும், அறிவையும், தெரிவையும் ஆற்றுப்படுத்துகிற ஆன்மாவின் தெளிவிலும் நீதி பார்க்க வேண்டும். நியாயம் காக்க வேண்டும். நேர்மை சேர்க்க வேண்டும். அப்படி வாழ்கிற ஆற்றலை, இன்சொல்லும் செய்ந்நன்றி அறியும் குணமும் கொண்டால்தான், முடியும் என்பதால்தான், செய்ந்நன்றி அறிதலுக்குப் பிறகு, நடுவுநிலைமை எனும் அதிகாரத்தை வள்ளுவர் வைத்துள்ளார்.