பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 தமிழ்நூல் தொகுப்புக்கலை 10. செங்குந்த இலக்கிய மாலை - காஞ்சி வீரபத்திர தேசிகர் - 38. 11. செங்குந்த வேல் பதிகம் - குமாரசாமி முதலியார்-10. 12. செங்குந்தர் மரபு விளக்கம்-கார்த்திகேயமுதலியார்-30. 13. செங்குந்தர் மரபு விளக்கச் சூறாவளி - வீராசாமி முதலியார்-கலிவெண்பா - 118 அடிகள். 14. செங்குந்த வேலவர் திருக்கை வழக்கத் தந்தாதி-(கலியுக வருடம் -4900) -ஆறுமுகப் பாவலர்-101. 15. செங்குந்த குலமாட்சி- தி.க.சபாபதி முதலியார்-18 இந்தப் பிரபந்தத் திரட்டுக்கு, கா. நமச்சிவாய முதலியார் முன்னுரை எழுதியுள்ளார்; மு. இராக வையங்கார் பிரபந்த ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார்; சுப்பிரமணிய தேசிகனார் இது பற்றிய கல்வெட்டுரை வரைந்துள்ளார். உ.வே. சாமிநாத ஐயர் முதலியோர் மதிப்புரைகள் அளித்துள்ளார்கள். ஒரு குலத்தின் பேரால் இப்படி ஒரு பிரபந்தத் திரட்டு இருப்பது வியப்பாயுள்ளாது. திருவருட் பிரகாசனார் சந்நிதிமுறைப் பிரபந்தங்கள் திருவருட் பிரகாசனா ராகிய வடலூர் இராமலிங்க வள்ளலார்மீது இயற்றப் பெற்ற நூல்களின் திரட்டு இது. 'சற்குரு துதிகள் முதல் 'தனி நேரிசை வெண்பா வரையிலான 15 நூல்களின் திரட்டு இது. ஆசிரியர்: தொழுவூர் வேலாயுத முதலியார். தொகுப்பு: தொழுவூர் வே. திருநாகேசுவர முதலியார். பதிப்பு: தொழுவூர் வே. செங்கல்வராய முதலி யார். சென்னை சீவ காருண்ய விலாச அச்சுக்கூடம் - 1912. ஆழ்வார் பிரபந்தம் திரட்டு: பண்டிதர் பி.ஆர். கிருஷ்ண மாச்சாரியார். சென்னை கலாரத்ந அச்சுக் கூடம் -1908. வடிவழக நம்பி தாசர் என்பவர் மூன்று ஆழ்வார்கள் மீது இயற்றிய பிரபந்தங்களின் தொகுப்பு இது. ஆழ்வார் மூவர்: தொண்டரடிப் பொடியாழ்வார் (மீது) பிரபந்தம், குல சேகரப் பெருமாள் ஆழ்வார் (மீது) பிரபந்தம், - திருப்பாணாழ்வார் (மீது) பிரபந்தம்.