பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை தற்கால உரை: ஐம்புலன்களையும் வெற்றி கொண்ட குற்றமற்றவர் தாம் வறியர் என்று பிறர் பொருளைக் கவர விரும்பார். புதிய உரை: இந்திரியம் முதலிய ஐம்புலன்களை வென்ற அறிஞரும், தமக்கு வீட்டுப் பேறாகிய பேரின்பப் பேறு கிடைக்க வில்லையே என்று எல்லை கடந்த ஆசையால் இழிவான முயற்சி எதையும் மேற்கொள்ள மாட்டார். விளக்கம்: சிற்றின்பம் என்பது இல்லறத்தார்க்கு இன்றியமையாதது தான். அந்த இன்பத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் உடலால் அழிந்து உள்ளத்தால் நைந்து, உணர்வால் நலிந்து, வாழ்வில் தொலைந்து போவது காலங்காலமாய் நடந்து வருவதுதான். சிற்றின்ப நெருப்புக்குப் புலன்கள் தாம் பேருதவி புரிந்து, புரட்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தி விடுகின்றன. கண், காது. மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களும் புற உறுப்புக்களே. உள்ளே இருக்கும் மனத்தை அடக்கவும் வேண்டுமே! அதனால்தான் புலம் வென்ற குற்றமில்லா அறிஞர் - என்று கூறி, அவரால் விருப்பம் என்பதை அடக்க முடியுமோ என்று கேட்கிறார். இலம் என்பது இல்லாமை. அதாவது பொருள் இல்லாமை என்பது. அதுபோல் ஆசை இல்லாமையும் இருக்க வேண்டும். இங்கே வீடு என்று ஓர் அர்த்தம். அதாவது மோட்சம். பேரின்ப நிலை. புலன்களை வென்றாலும் பூரிக்க வைக்கும் பேரின்பம் கிட்டவில்லையே என்ற ஆதங்கம் இருக்குமல்லவா? அந்த ஆசை ஏற்படக்கூடாது. அப்படி ஏற்படுகிறபோது, அறிஞரானவர் வெஃகுகின்ற வேலையில் ஆட்பட்டு விடக்கூடாது என்று 4 வது குறளில் எச்சரிக்கிறார். 175.அஃகிஅகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் பொருள் விளக்கம்: அஃகி அகன்ற = நுண்மையும் அளவு கடந்தும் உள்ள அறிவென்னாம் = அறிவானது எதற்கு? யார் மாட்டும் - எவராக இருந்தாலும் வெஃகி - அவரிடம் உள்ளதற்கு ஆசைப்பட்டு வெறிய செயின் = பித்தரைப்போல் சினந்து தீமை செய்பவர்