பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 373 இப்படி சுவாசிக்கும் உயிர்க் காற்றானது. உடலுக்குள்ளே சென்றதும் பத்துப் பிரிவாகப் பிரிந்து, பாங்குடன் பணியாற்றுவதைத்தான் வள்ளுவர், வளி வழங்கும் என்று குறித்தார். வளி உடலுக்கு வழங்குவது. மனவலிமை, உடல் வளமை ஆத்மாவுக்கு மேன்மை. இப்படிப்பட்டவரை உயர்த்தும் கேண்மை. வள்ளுவர் மல்லல் என்றார், மா என்றார், ஞாலம் என்றார் கரி என்றார். இப்படிப்பட்ட சிறப்பாளருக்கு நோய் வருமா? வேதனை தருமா? மனநோய், உடல் நோய் எப்படி வரும்! அதனால், அவருக்குத் துன்பமே இல்லை என்று துணிந்து கூறினார். 4வது குறளில் மன்னுயிர் ஆத்மாவை ஒம்பு என்றார். அந்த ஆத்மா அளிக்கும் அரிய வாழ்க்கையைத்தான் ஐந்தாவது குறளில், மிக அருமையாக விளக்கியிருக்கிறார். 246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். பொருள் விளக்கம்: பொருள் = தனது உடலைக் காக்கும் நெறிமுறைகளில் நீங்கி = விலகியும் சிதறியும், பொச்சாந்தார் = (தம்மை) மறந்தும், குற்றங்களைச் செய்பவர் என்பர் = என்று சொல்லப்படுபவர் அருள் நீங்கிட - நல்வினைகளில் இருந்து விலகி வார்- தொடர்ந்து செய்தொழுகு = (தீவினைசெய்கையுடன்) நடக்கும்போது அல்லவை = (நோய்களாலும் வேதனைகளாலும்) துன்பப்படுவர் சொல் விளக்கம்: பொருள்- உடல்; பொச்சாந்து = குற்றம், மறதி, பொல்லாங்கு செய் = செய்கை, மனச் செய்கை, உடல் செய்கை வார்- தொடர்ந்து: ஒழுகுதல் நடத்தல்; நீங்கு = விலகு, சிதறு முற்கால உரை: உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்த்து, தவிரப்படும் கொடுமைகளைச் செய்தொழுகுவாரை, முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது, தாம் துன்புறுகின்றமையை மறந்தவரென்று, நல்லோர் சொல்லுவர்.