பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா so சொற்களை எந்த இடத்தில் பேசவேண்டும் என்பதற்கு இடம் இருக்கிறதல்லவா! சாதாரணவர்களிடையே பேசுகிறபோது, அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் வீண் பொழுது போக்க, அப்படிப்பட்ட சொற்கள் உதவுகின்றன. ஆனால் அதையே அறிஞர்கள் கூடியுள்ள சபையிலே பேசுகிறபோது, அவர்கள் மட்டும் ஆத்திரப்படுவதில்லை. மாறாக, இந்த வானகமும் வையகமும் எள்ளி நகைக்கிறது. வானகம், வையகம் என்ற இரு சொற்களை, வள்ளுவர் பல குறட்பாக்களில் கூறியிருக்கின்றார். இங்கே சூரியன் (எல்) உலா வருகிற வானம்; பொறுமைக்குரிய பூமி என்னும் இரண்டும், பொறாது போய் பேசுபவனை அழியச் செய்துவிடும் என்று இங்கே கூறுகிறார். - எல்லாரும் என்பதற்கு, பூமியில் வாழ்கிற அனைவரும் என்றும் பொருள் கொள்ளலாம். வார்த்தைகளை வைத்து விளையாடும் தமிழ்ச் சித்தர் வள்ளுவர் பல்லார், எல்லார் என்று பெய்திருக்கிற சொற்கள், எண்ணி எண்ணி இன்புறும் பான்மையில் அமைந்திருக்கிறது. - உலகமே வெறுக்கிற பயனற்ற சொற்கள், வாழ்வின் அழிவுக்கு வழி கோலும் என்பதாக வள்ளுவர் முதல் குறளில் கூறுகிறார். 192. பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது. பொருள் விளக்கம்: பல்லார் முன் = அறிஞர்கள் பலர் முன்னே பயன் இல பயமில்லாமல் அர்த்த மில்லாதவற்றை சொல்லல் = புகழ்ந்து சொல்லுதல் நயன் இல . நன்மையும் மகிழ்ச்சியும் தராதவற்றை நட்டார்கண் = நண்பர்களிடத்தே செய்தலின் செய்வதைக் காட்டிலும் தீது = மரண அவதிபோன்ற கொடுமையாம்.