பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 497 தாரை என்றால் நேரோடல் என்று அர்த்தம். அதாவது நேர்வழி செலுத்துதல். ஒறுத்தல் என்ற சொல்லுக்கு அடக்குதல் என்ற பொருள் கண்டு இருக்கிறேன். குற்றத்திற்காக ஒருவனைத் தண்டிக்கும்போது, வருந்தலாம். வருந்தாமலும் போகலாம். திருந்தலாம். திரிந்தும் போகலாம். ஆனால், வள்ளுவரின் உள்ளத்தில், தவறு இழைத்தவரைத் தண்டிக்க வேண்டாம். அவனது பகை உணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக, அலைத்துக் குறைத்து அடக்க வேண்டும் என்கிறார். அப்போதுதான் அவர் அஞ்சுவர். வாடுவர். அடங்குவர். பின்னடைவர். அதற்கு இனிய சொற்களும், செயல்களுந்தான் உதவும் என்கிற கருத்தைத்தான் நான்காவது குறளில் நன்னயமாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார். 315. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை பொருள் விளக்கம்: தம் நோய்போல் = தன் ஆத்ம வேதனையைப் போல பிரிதின்நோய் = பகைவர்களின் வேதனையும் இருக்கும் என போற்றாக்கடை = எண்ணி ஏற்காத (பங்கிடுதல்) முடிவு எடுக்கும் அறிவினான் = அறிவின் ஆன் - அறிவுள்ள ஆத்மாவினால் ஆகுவது உண்டோ = எந்தப் பயனும் உண்டோ? இல்லை. சொல் விளக்கம்: ஆன் - ஆன்மா ஆகுவது ஆவது: நோய் - துன்பம், வேதனை தம் = ஆத்மா, பங்கிடுதல்; போற்றார் = பகைவர்; கடை - முடிவு முற்கால உரை: துறந்தார்க்கு, உயிர் முதலியவற்றை உள்ளவாறு அறிந்த அறிவினால் ஆவதொரு பயனுண்டோ? பிரிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவாவிடத்து. தற்கால உரை: பிற உயிகளுக்கு ஏற்படும் துன்பங்களைத் தனக்கு உண்டாகும் துன்பங்களாக எண்ணி, அவ்வுயிர்களைக் காப்பாற்றா விட்டால் ஒருவன் தான் பெற்றுள்ள அறிவினால் ஆகக் கூடிய பயன்யாது." ஒன்றுமில்லை.