பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 461 விளக்கம்: தீச்செயல்கள் நெருப்புபோல. தன்னையும் எரித்துக் கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களையும் எரிக்கும் ஆற்றல் கொண்டது. அதுபோலவே, தீய எண்ணம் தோன்றுகிறபோதே, அவன் தீயவனாகின்றான். அவனது எண்ணம் தீய கருக்கொள்கிறது. அது தீமையாக உருக்கொள்கிறது. செயல்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது. இந்தத் தீயானது தொடருமேயன்றி தணியாது. தீ தணியாவிட்டால் என்ன ஆகும்? இந்தக் கேள்விக்கு விடையாக 9 வது குறள் உருவாகி வந்திருக்கிறது. களவைத் தவிர வேறு சிந்தனை இல்லாதவன் களவல் ல என்னும் சொல்லில், சொல்லிக் காட்டுகிறார். ஏன் வேறு சிந்தனை இல்லையென்றால், அந்தத் தீய எண்ணம் எனும் தீ, நல்லனவற்றை யெல்லாம் எரித்து வெறுமையாக்கிவிட்டது. ஆக, அவன் நெஞ்சம் முழுவதும், தீய நினைவே தேங்கிக் கிடக்கிறது. அப்பொழுது, ஆறறிவு மனிதனாக இல்லை. உணர்வுள்ள ஒரே ஒரு அறிவினனாகத்தான் இருக்கிறான். அவனது உணர்வு முழுவதும், ஒன்றே ஒன்றில், கடும் பற்றுள்ளத்தோடு, அதாவது கரவோடு கரைந்து விட்டிருக்கிறது. ஆகவே, மூடன் என்று பெயர் பெறுகிறான். தவர் என்றால் தமர். தமர் என்றால் மூடர். மூடன் செய்யும் எந்தக் காரியமும், முட்டாள் தனமாக அமையும். விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அந்த விளைவு, இறுதியில் அவன் முடிவாகத்தான் அமையும். அதனால் தான் வீவர் என்றார். கேடு அடைவர். அல்லது சாவுக்கு ஆளாவர். இந்த இரண்டும் தான் ஞானமில்லாமல், அறிவற்று செய்கிற அழிவு வேலைக்கு, இழிவுப் பரிசாகக் கிடைக்கிறது. ஆகவே, களவு என்பது எண்ணும்போதும் துன்பம் தரும், செய்யும் போதும் சேர்த்து அழித்து விடும் என்று இக்குறளில், களவின் கடுமையான முகத்தைக் காட்டி நம்மை எச்சரிக்கின்றார்.