பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகையும் பரிபாடலும் 335 'அரிதாய வறன் என்னும் (11) கலிப்பாவினுள், எனவும், ‘மணிநிறமலர்ப் பொய்கை என்னும் (70) கலிப்பாவினுள் எனவும் கூறியிருப்பதனால் அறியலாம். கலிப் பாட்டு: கலித்தொகை கலிப்பாட்டு என்னும் பெயராலும் குறிப் பிடப் பட்டுள்ளது. இதனைத் தொல்காப்பியம் - கற்பியலில்’ ‘புணர்ந்துடன் போகிய என்னும் (7 ஆம்) நூற்பாவின்கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள. "அரிதாய வறனெய்தி என்னும் (11) கலிப்பாட்டுத் தலைவன் அன்புறுதக்கன கூறக்கேட்ட தலைவி அவற்றைக் கூறிப்புனைநலம் வாட்டுநர் அல்லரென வரவுகருதி கூறிய வாறு காண்க" என்னும் உரைப்பகுதியில் காணலாம். பரிபாட்டு கலித்தொகை கலிப்பாட்டு’ என வழங்கப்பட்டிருப்பது போலவே, பரிபாட்டு’ என வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பரிபாடல் என்னும் தொகைநூலின் முதல் பாட்டின் உரையில் பரிமேலழகர் எழுதியுள்ள 'பரிபாட்டென்பது இசைப் பாவாதலின், இஃது இசைப்பகுப்புப் படைத்த புலவரும் பண்ணும் மிட்டு...' என்னும் உரைப் பகுதியால் உணரலாம். தொல்காப்பி யரேகூட, 'கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் (அகத்திணை யியல்-56) எனவும், கைக்கிளை பரிபாட்டு அங்கதத் செய்யு ளோடு (செய்யுளியல்-118) எனவும், பரிபாடலைப் பரிபாட்டு’ எனக் கூறியுள்ளமையைக் காணலாம். உரையாசிரியர்களும் 'பரிபாட்டு' என வழங்கியுள்ளனர். இசைப்பாட்டு 'பாடல் வகையால் பெயர் வழங்கப் படுகிற கலித் தொகையும் பரிபாடலும் இசைப்பாட்டால் ஆனவையாகும். 'பரிபாட்டு என்பது இசைப்பாவாதலின்' எனப் பரிமேலழகர் கூறியிருப்பது மேலே எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. மற்றும்