பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய_உரை 245 அதனால்தான் தீமை செயலான திருட்டில் வாழ்பவனுக்கு நரம்புகள் தளர்ந்து முறிந்து போகும். விசையிழந்து தசைகள் இற்றுப்போய் வீழ்த்தும் என்று குறிக்கவே இறல் என்ற சொல்லைப் போட்டிருக்கிறார். பிறர் பொருளை வெறுப்பது என்கிற வெஃகாமையை செருக்கு என்றார். செருக்கு என்றால் கர்வம் அல்ல. அகங்காரம் அல்ல. ஆண்மை. குறைகளை விரட்டிய களிப்பு. நிறைவாழ்வு தருகிற பெருமிதம். அதனால்தான் விறல் என்றால் வெற்றி மட்டுமல்ல. அது தன்னை வென்ற வலிமை. புலன்களை புறம் தள்ளிய பெருமை. பலஹீனத்தை வென்ற வீரம். பிறப்பை பெருமைக்கு உள்ளாக்கிய வெற்றி. ஆகவே விரும்பாமை வேண்டாமை என்ற வெஃகாமையின் வெற்றியைச் கடைசிக் குறளில் பரணியாகப் பாடி முடிக்கிறார்.