பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை *79 நூல்கள், பல பாடல்களின் தொகுப்பு நூல்கள் போல் இல்லா மல், பல நூல்களின் திரட்டாக உள்ளன. கன்யூஷியஸ் திரட்டிய நூல்களுக்குப் பிற்காலத்தில் எழுந்த சீன நூல்கள், மஞ்சு அரசமரபைச் சார்ந்த சியென். லுங் (Chien - Lung-1736 - 96) என்னும் சீனப் பேரரசனின் ஆதரவில், பதினெட்டாம் நூற்றாண்டின் இடையில், நான்கு பாகங்களாகத் தொகுக்கப் பெற்றன. இவை, நால்வகைத் தொகைநூல்கள் என்று பெயர் வழங்கப் பெறுகின்றன. 1875-Qā’, ‘Guir-34–35 surgår-o- (Po-Tzu-Chuan-Shu') என்னும் நால் தொகுக்கப் பெற்றது. இது, பழைய சீன மெய் யுணர்வுத் துறை ( தத்துவத் துறை) பற்றியதாகும். இவ்வாறாகக் காலந்தொறும் சீனமொழியிலும் பல தொகைநூல்கள் தோன்றி வளர்ந்து வந்தன. உலகப் பொதுத் தொகை நூல்கள் இதுகாறும், பழம் பெரு மொழிகள் என்னும் காரணத் தால், கிரீக், இலத்தீன், சம்சுகிருதம், எபிரேயம், சீனம் ஆகிய ஐந்து மொழிகளிலுள்ள தொகைநூல்கள் பற்றியும், பிற் பட்டவை யாயினும் இன்று உலகில் பேரரசு செலுத்துவதாலும், எதிர்கால உலக மொழிகளாய் விளங்கப் போகின்ற மையா னும் பிரெஞ்சு, ஆங்கிலம் என்னும் இரு மொழிகளின் தொகை நூல்கள் பற்றியும் ஒரு சிறிது ஆய்ந்தோம். இவை போலவே, இத்தாலி, செர்மனி. ரஷ்யன், துருக்கி, அரபு, பாரசீகம், ஜப் பான் முதலிய பல்வேறு மொழிகளிலும் தொகை நூல்கள் பல தோன்றி வளர்ந்து வருகின்றன. எல்லாவற்றையும் பற்றி எழுதப்புகின் எல்லை கடந்து போகும். இன்னும் கேட்டால், உலக மொழிகள் பலவற்றிலும் உள்ள பல்வேறு இலக்கியங் களையும் பற்றித் தொகுத்து விளக்கும் உலகப் பொதுத்தொகை நூல்கள் சிலவும் இன்று எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, "ஃபிலோ எம்.பக்'(Philo M.Buck, 3r.) என்பவரால் உருவாக்கப் பட்டதும், நியூயார்க் மாக்மில்லன் நிறுவனத்தால் அமெரிக்கா go Gausfull_til Lil gluorðu, ‘An Anthology of World