பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ○ l2 மயங்கி = மதிகலங்கி வலைப்பட்டார் தீமைகளின் கைகளில் சிக்குண்டவர்கள் மற்றையவர் - முன்பு சுட்டியது போல, துன்பங்களையே அனுபவிப்பர். சொல் விளக்கம்: தலைப்பட்டார் = எதிர்த்தவர்; தீர தீர்மானமாக மயங்கி = மதிகலங்கி; மற்றை முன்பு சுட்டியதுபோல முற்கால உரை: முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார். அங்ங்னம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிற்பட்டார். தற்கால உரை: முற்றும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை எய்தியவர்கள் ஆவார்கள். அப்படிதுறக்காதவர்கள் துன்பவலையில் அகப்பட்டவர் ஆவார்கள். புதிய உரை: தீமைகளைத் துணிந்து தீர்மானமாக முடிவெடுத்து எதிர்த்தவர்களே துறக்க முடியும். சிறிதளவு மதிமயங்கினால் கூடத் தீமையின் வலையிலே சிக்கிச் சீரழிந்து போவார்கள். விளக்கம்: தீமைகளை எதிர்ப்பதற்குத்துணிவு வேண்டும். துணிவு என்பது சிந்தை ஏற்றுக் கொள்கின்ற தீர்மானமான முடிவு. வள்ளுவரின் 'எண்ணித்துணிக என்பதனை நாம் எண்ணிப் பார்க்கலாம். மாறுபடுகின்ற தன்மை உடையதால்தான் உடல் என்றனர். ஆசைப்பட்டு வருந்துகிற தன்மை உடையதாக இருப்பதால்தான் மெய்யை உடம்பு என்றனர். ஒரு நிலையில் நிற்காத தன்மை உடையதாய் இருப்பதால்தான் அதை மனம் என்றனர். ஆக, ஒரு மனிதன் பலவீனங்களின் மொத்த உருவமாகத் திகழ்கிறான் என்று குறிப்பிடவந்த வள்ளுவர், தீமைகளை எதிர்க்கும் வல்லவரைத் தலைப்பட்டார் என்கிறார். எளிதில் தாழ்ந்துவிடுகிற, வீழ்ந்து படுகிற மனிதர்களை வலைப்பட்டார். அவர் தீமையின் வஞ்சகத்திற்கு விலைப்பட்டார் உயிர் வாதையோடு கொலைப் பட்டார் என்று கூறி, துணிவான மனமே இனிதான வாழ்க்கையைத் தருகிறது என்று இந்த எட்டாவது குறளில் குறிக்கிறார்.