பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 தமிழ்நூல் தொகுப்புக் கலை மக்களும், பல்சுவை, வசந்த காலம், வான் வெளிப் பயணம், குழந்தை உலகம், இந்திய நட்புறவு, சோவியத் நட்புறவு என்னும் பெரிய தலைப்புகளின் கீழ்ப் பல உள்தலைப்புகள். லெனின் பிறந்தார் முதல் அக்டோபர் புரட்சி வாழ்த்து ஈறாக 85 உள்தலைப்புகள். இறுதித்தலைப்பில், வள்ளத்தோல், செளத்ரி, பிரேம்தவன், இரகுநாதன் ஆகியோரின் வாழ்த்துக் கவிதைகள் உள்ளன. வழி வழி வள்ளுவம் தொ.ரா.பி. சேதுப் பிள்ளை. வெ.பழநியப்பா பிரதர்ஸ். ஆசியன் பிரின்டர்ஸ், சென்னை. முதல் பதிப்பு-1953. மூன்றாம் பதிப்பு - 1957. சிலப்பதிகாரம், மணி மேகலை, சீவக சிந்தா மணி, கம்பராமாயணம், பாரதியார் கவிதை ஆகிய நூல் களில் திருக்குறள் கருத்து வந்துள்ள பாடல்கள் எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. உரை விளக்கமும் உண்டு. மனிதனைப் பாடுவேன் - ஆ - வால்ட் விட்மன் என்னும் ஆங்கிலக் கவிஞர். இவர் கவிதைகள், பால பாரதி சது. சுப்பிரமணிய யோகியால் தமிழாக்கம் ச்ெய்யப்பட்டுள்ளன. வெ-சோதி நிலையம், சென்னை, மாருதி பிரஸ், சென்னை. 1958. உ-உடலும் உயிரும், என்பது முதல் கடைசி வந்தனம் வரை பல் தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. அமெரிக்காவில், லாங் ஐலண்டு (Long Island)என்னும் பகுதியில் உள்ள வெஸ்ட் ஹில்ஸ் (West Hills) என்னும் இடத்தில் விட்மன் பிறந்தார். இவர் கவிதை கள் மிகவும் துடிப்புள்ளவை. உமார் கயாம் பாடல்கள் பாரசீகக் கவிஞர் உமார் கயாம் பாடிய பாடல்களைச் சாமி சிதம்பரனார் தமிழாக்கம் செய்துள்ளார். வெ-இலக்கிய நிலையம், சென்னை. தாஸ் பிரஸ், சென்னை. முதல் பதிப்பு1946. இரண்டாவது - 1963. மொத்தப் பாடல்கள் 101. கவி மணி தேசிக விநாயகம் பிள்ளையும் இப்படி ஒரு மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.