பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 27. தவம் அருளுடைமை என்னும் சீராண்மையை வளர்க்கவும், புலால் மறுத்து ஒதுக்கும் பேராண்மையை பெருக்கவும், உதவக்கூடிய உள்ளத் திண்மைக்குத் தவம்தான் கைகொடுக்கும், வழி நடத்தும் என்பதால் தான், துறவறவியலில் மூன்றாம் அதிகாரமாகத் தவம் வைக்கப்பட்டுள்ளது. தவம் என்னும் சொல், தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது. தவ் + அம் என்று பிரிகிற சொல், தவத்தின் சீலத்தை, அருள் கோலத்தை அழகுபட விரித்துரைக்கிறது. தவ் எனும் சொல்லுக்குத் தன்னிலை பிறழ்ந்து சுருங்குதல் என்று பொருள். தனது நிலையான மனித சுபாவ நிலையிலிருந்து மாறி, சுருங்கி நெறி நிற்றல்தான் தவ் என்றாகிறது. அம் என்றால் அழகு, சீர், நீர் என்றெல்லாம் அர்த்தம் உண்டு. சீராகத் தன்னிலை பிறழ்ந்து சுருங்குதல் என்றால், உடலுக்குத் தேவையான உணவு, உணர்வு, புலன்கள், நலன்கள் போன்ற எல்லாவற்றிலும் குறைத்து, நிறைவு காணுதல். மனித உடலுக்கும் மனத்துக்கும் பாதகமானவை ஏழு என்பர் 1. கர்வம் எனும் செருக்கு, 2. அற்ப ஆசை (உலோபம்); 3. காமம்; 4. பகை; 5. உணவாசை (போசனப் பிரியம்) 6. காய்தல் எனும் கோபம்; 7. சோம்பல் எனும் மடி. ந்த ஏழும் உடலுக்கள் பெருகினால், உலகத் துன்பங்கள் நத Մ(ւՔ இ) C) * = i. - எல்லாம் ஒடி வந்து ஒளி ந்து கொள்ளும் அனைத்துக் கொள்ளும். ஆகவே, சுருங்குதல் என்பது, உண்டி சுருங்குதல், கோபம் சுருங்குதல், உட்பகை சுருங்குதல், (உட்பகை என்பது காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாச்சரியம்) புலன்களின் கடுமை சுருங்குதல். ஆகவே, தவம் என்பது உயிருக்கு உறுதி பயக்கும் செயல்களைச் செய்தலாகும். தேகத்திற்குத் தக்கன எது, தகாதன எது என்று பகுத்தறிந்து நடந்து கொள்ளுதலாகும். அத்துடன் நில்லாமல் தவத்திற்காக எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதை மனமுவந்து செய்தல் என்பது தான் முக்கியம்.