பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I9 | அதனால், என்றும் இடும்பை தரும் என்றார். நல்வினைகள் என்ற விதைகள் நல் வாழ்வு என்கிற விளைச்சலைத் தருவதால்தான், வித்தாகும் என்றார். நன்றியை அறம் நன்மை என்றாலும் அது உடல் மனத்தின் பிரியங்களிலிருந்து காக்கும் உள்ளொளியாம் அமைதியையே தருகிறது என்று 8ம் குறளில் கூறுகிறார். 139. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் பொருள் விளக்கம்: தீயவழுக்கியும் = தீய செயல்களில் தவறுதலாக உட்பட்டாலும் ஒழுக்கம் உடையவர்க்கு = ஒழுக்கத்தை உயிராகக் காப்பவர்க்கு வாயாற் சொலல் = (தவறிய) உண்மையை சொல்லுதல் ஒல்லாவே - உடன்பாடானதாகவே இருக்கும் சொல் விளக்கம்: ஒல்லுதல் = இணங்குதல், உடன்படுதல், வாய் = உண்மை, வழி; வழுக்குதல் - தவறுதல், மறத்தல் முற்கால உரை: மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் தொழில்கள், ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. தற்கால உரை: நல்லொழுக்கம் உடையவர்கள் ஒருநாளும் மறந்தும் தீயவற்றைப் பேசமாட்டார்கள். புதிய உரை: ஒழுக்கம் உடையவர்கள் தவறிப் போய்த் தீயசெயல் புரிய நேரிட்டாலும் ஒத்துக் கொள்வாரேயன்றி உண்மை சொல்வதில் இருந்தும் விலகிட மாட்டார்கள். விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களும் மனிதர்கள் தாமே மனிதன் என்றாலே தவறுகள் செய்வது இயல்புதான். (Man is cr) என்று கூறுவது போல ஒழுக்கசாலிகள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறிழைக்கக் கூடும். தவறுகளைப் பிறர்க்குத் தெரியாமல் மறைப்பதே குற்றம் என்பதால், தான் செய்த தவற்றை பிறாறிய உண்மையைச் சொல்வதற்கு அவர்கள் அச்சப்பட மாட்டார்கள் வெட்கப்பட மாட்டார்கள். செய்த தவறைத் திருத்திக்