பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை り முற்கால உரை: பிறர்க்குத் தீங்குகளைச் செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத் தெனின், ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன் தன்னை விடாதுவந்து அடியின் கண் தங்கிய தன்மைத்து. தற்கால உரை: தீய வினைகளைச் செய்தவர் அழிதல், ஒருவன் நிழல் அவனை விட்டு நீங்காது, அவன் அடிகளின் கீழ்த் தங்கினாற் போலும் புதிய உரை: பிறருக்குத் தீய வினைகளைச் செய்பவரையே, தங்குமிடமாகக் கொண்டு, (நீதியை நிலை நாட்ட) தீவினைகள் அவரை விட்டு நீங்காது தாக்கிக் கொல்ல, இறுக்கமாகி, உடலாலும் மனத்தாலும், அவரை இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. விளக்கம்: தீவினைகள் செய்பவர்கள், தைரியமாகவே செய்கிறார்கள். செய்த தீங்குகளையும், குற்றங்களையும், அவர்கள் மறந்தும் போகலாம். மறந்தது போலும் நடிக்கலாம். ஆனால், செய்யப்பட்ட தீவினைகளின் கடுமைகள், அவர்களை விட்டு நீங்காமல், அவர்களையே தங்குமிடமாக ஆக்கிக் கொள்கின்றன. தீவினைகளுக்குத் தண்டனை தருகிற நிழலான நீதியானது, அவரது உடலையே புகலிடமாகக் கொண்டுவிடுகிறது. அது முதற் கொண்டு, அவரது உடலை பதம் இழக்கச் செய்கிறது. பலம் அழித்துக் கொல்கிறது உடலின் உருவத்தையும் சிதைக்கிறது. வடிவமும் உருவமும் நாளுக்கு நாள் வற்றி, வனப்பிழந்து வளமிழந்து வன் கூடாக மாற்றிவிடுகிறது. மலைப்பாம்பு தனது இரையின் மேல் மெதுவாகச் சுற்றி சுற்றி வூ லு, கடைசியாக இறுக்கி, உருக்குலைத்து உண்ணுவது போல, தீவினைகள் எனும் மலைப்பாம்பும், செய்தவரைச் சுற்றிச் சுற்றி, இறுதியாக இறுக்கி, அழிக்கிறது. இதைத்தான் வீயாது - அடி - உறைந்து - அற்று என்னும் நான்கு சொற்களில் நயமாக உரைக்கின்றார்.