பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்காலை உரை: அருள்விடுத்து, அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து வாழ்பவர், தாம் தேடிய பொருளை இழந்து, பிறரால் மறக்கப்பட்டவர் என்று சான்றோர் கூறுவர். புதிய உரை: தனது உடல் அருமையை மறந்து, அருள் துறந்து தீவினைகளைத் தொடர்ந்து செய்பவர், நோய்களாலும் வேதனைகளாலும் துன்புற்று அழிவர். விளக்கம்: பொருள் என்பதற்கு உறுதிப் பொருள் என்றும், செல்வப்பொருள் என்றும் பொருள் கொண்டிருக்கின்றனர். உடல் என்பதற்குப் பொருள் என்று ஒரு பொருள் இருப்பதால், நான் உடல் என்று பொருள் கொண்டிருக்கிறேன். உடலின் அருமையை, மெய்ம்மையை, மேன்மையை அறியாத மக்கள் தாம், உடலை மறப்பார்கள். ஒழுக்கத்தை வெறுப்பார்கள். விருப்பம் போல் நடப்பார்கள். வலிமையை அழிப் பார்கள். சக்தியைத் தொலைப்பார்கள். நோய்களால் இளைப்பார்கள். வேதனைகளால் களைப்பார்கள். இந்தக்கருத்தைத்தான் பொருள் நீங்கி என்றார். அந்த நிலை ஏற்பட்டவுடனே அருள் நீங்கி என்றார். அதனைத் தொடர்ந்து செய்வதற்கு வார் என்றார். ஒழுகுவார் என்றார். மனத்தாலும் உடலாலும் தொடர்ந்து ஒழுகுவதைத்தான் செய்தொழுகு என்றார். அதனால் ஏற்படும் விளைவுகளை, வள்ளுவர் மிக அருமையாக, தீவினையில் ஈடுபடுபவர்கள் அஞ்சி நடுங்கும் படியாக அல்லவை என்று குறிப்பிட்டிருக்கிறார். அல்லவை என்கிற துன்பம். நோய்களை அழைக்கும். வேதனைகளை மிகுவிக்கும். உடலில் வறுமையை விரிவுபடுத்தும், மெய் வருத்தத்தை மிகுதியாக்கும். மனவருத்தத்தைக் கடலாக்கும். வாழ்க்கையை ஒருவழியாக்கி விடும். ஆகவேதான், செய் தொழுகுவார். துன்பப்படுவார்.

  1. .ې-N H H H i **** i அரு ளாளரு ம ஆகாத ன மiசயதால் .-) ി ി) ി) L1 , വ T1 . எக்காலத்திலும் பொருளி லிருந்து நீங்கக் கூட து என்று

உண்மையை உலகத்தார் உணர்ந்தாக வேண்டும் என்னும்