பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 529 தனிப்பாடல்:திரட்டு பல ஊர்கள் மேலும் பல பொருள்கள் பற்றியும் பலர் பாடிய பல்வகைப் பாக்களின் தொகுப்பு. இந்நூலின் முதல் பக்கம் இல்லாமையால், வெளியீடு-அச்சகம்-ஆண்டு முதலியன அறியப்பட வில்லை. திருத்தணிகை வண்ண மஞ்சம் -1894 ஆ-காஞ்சி நாகலிங்க முனிவர். சென்னை நிகேதன அச்சி யந்திர சாலை. ஜய-ஆவணி. 1894. தணிகை இறைவன் மீது பாடப்பெற்ற 30 வண்ணப் பாக்களின் தொகுப்பு. பலர் சாத்து கவிகள் அளித்துள்ளனர். தனிப் uTLನಿಹir — 1894 ஆசிரியர் ஆ. வள்ளிநாயகம் பிள்ளை-ஆசிரியர் வழிபாடாகப் பல காலம் பாடிய பல பாடல்கள். கலா ரத்நாகர அச்சுக் கூடம், சென்னை-1894-சிறு நூல். விகடப் பலபாடல் திரட்டு - 1900 இதில், சென்னை மகா விகட தூதன்' என்னும் இதழில் அவ்வப்போது வெளிவந்த விகடப் பாடல்கள் தொகுக்கப்பட் டுள்ளன. உலகியல் சீர்கேடு பற்றிய நையாண்டிப் பாடல்கள், விகட வெற்றி வேற்கை, விகட உலக நீதி, செகசால சித்தர் பாடல் விகட விவேக சிந்தாமணி முதலிய பல வகைப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தொகுப்பு ஏ.எப். சைமன், சென்னை, விக்டர் பிரஸ் - ஆண்டு 1900. தனிப் பாடல் திரட்டு 1905-1907 முதல் பாகம் - காளமேகப் gು ಮಿಗೆ முதல், வள்ளுவர்-ஒளவையார்-கம்பர் முதலியோர் உட்பட - பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் ஈறாக உள்ள 29 புலவர்களின் பாடல்களின் தொகுப்பு இது. மொத்தச் செய்யுள் 743. இதற்கு மகாவித்துவான் கா.இராம சாமிநாயுடு உரை எழுதியுள்ளார். பத்மநாப விலாசம் பிரஸ், சென்னை-1905 ஆம் ஆண்டு.