பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிமிடை பவளம் 237 களிற்றி யானை நிரையைப் போலவே மணிமிடை பவள மும் ஒரு தனி நூல் போலவே மதிக்கப்பட்டது. நச்சினார்க் கினியர், தமது உரையில், களிற்றியானை நிரை என்னும் பெயரைவிட மணிமிடை பவளம் என்னும் பெயரை மிகுதியா கக் குறிப்பிட்டுள்ளார் எனலாம். எடுத்துக் காட்டாக இரண்டு இடங்கள் வருமாறு: 1 (1) தொல்காப்பியம் அகத்திணையியலில், திணை மயக் குறுதலும் கடிநிலை யிலவே' என்று தொடங்கும் (12 ஆம்) நூற்பாவின் கீழ், துஞ்சுவது போல விருளி விண்புக என்று தொடங்கும் அகநானூற்றுப் (139-ஆம்) பாட்லை முழுதும் தந்து, அதன் கீழே, இம் மணிமிடையவளத்துப் பாலைக்கண் முன்பணியும் வைகறையும் ஒருங்கு வந்தன"-என நச்சினார்க் கினியர் எழுதியுள்ளார். (2) தொல்காப்பியம் களவியலில் களவல ராயினும் காம மெய்ப் படுப்பினும் என்று தொடங்கும் (24-ஆம்) நூற்பாவின் கீழ், இரும் புலி தொலைத்த பெருங்கை வேழத்து' என்று தொடங்கும் அகநானூற்றுப் (272-ஆம்) பாடல் முழுவதையும் தந்து, அதன் கீழே, இம் மணிமிடை பவளத்துத் தலைவனைச் செவிலி கண்டு முருகெனப் பராவினமை தோழி கொண்டு கூறினாள்.”. என்று அவர் வரைந்துள்ளார். இத்தகைய வழக்காற்றைக் கொண்டு, மணிமிடை பவளத் தையும் ஒரு தனித் தொகை நூலாகக் கூறலாமல்லவா?