பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 தமிழ்நூல் தொகுப்புக் கலை என்று கூறியுள்ளார். பின்னால் விரிவாகச் சொல்லப்போகும் செய்திகளை முன்கூட்டித் தொகுத்துச் சொல்வது பாயிர மாகும். பதிற்றுப் பத்தில் ஒவ்வொரு பத்துக்கும் முன்னால் உள்ள பதிகம், அந்தப் பத்தைப் பற்றிய செய்திகளைச் சுருக் கிச் சொல்வதால், ஒவ்வொரு பதிகத்தையும் ஒவ்வொரு பத்தி னுடைய பாயிரம் என்று சொல்லலாம் போல் தோன்றுகிற தல்லவா? எனவே, இந்தப் பதிகம்' என்னும் பெயரைப் பார்த்தே நன்னூலார் பாயிரத்திற்குப் பதிகம் என்னும் பெயரும் உண்டு என்று கூறியிருக்க வேண்டும். இதை நன்கு உணர்ந்து கொண்ட சங்கர நமச்சிவாயர். "பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதி யாகச் சொல்லுதல் தானே' என்னும் திவாகர - பிங்கல நிகண்டு நூற்பாவை எடுத்துக் காட்டி நல்ல விளக்கம் தந்துள்ளார். இந்த மேற்கோள் நூற் பாவும் பதிற்றுப்பத்தின் பதிகத்தைப் பார்த்தே இயற்றப்பட் டிருக்க வேண்டும். இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் அன்றோ? மற்றும், எந்தப் பழைய பாட்டியல் நூலிலும் இடம் பெறாத பதிகம் என்னும் நூலுக்குப் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் பின்வருமாறு இலக்கணம் சொல்லப்பட் டுள்ளது:- - "ஆசிரி யத்துறை அதனது விருத்தம் கலியின் விருத்தம் அவற்றின் நான்கடி எட்டின் காறும் உயர்ந்த வெண்பா மிசைவைத்து ஈரைந்து நாலைந்து என்னப் பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்.” இதில், பத்துப் பாட்டு இருப்பதன்றி, இருபது பாட்டு இருப்பதும் பதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆகக் கூடியும், பதிகம் என்னும் பெயரைப் பிற்காலத்தார் பல கோணங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்னோடியாக இருந்தது பதிற்றுப் பத்தின் பதிகம் என்பது பெறப்படும். பிற்காலத்தில், பதிகம் என்பதற்குப் பலவாறு விளக்கம் செய்து கொண்டுள்ளனராயினும், பதிற்றுப் பத்தில் பதிகப்