பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால்ம் 429 பெயர் தரப்பட்டிருக்கலாம். இது பிற்காலத்தவர் இப்பகுதிக் குத் தந்த பெயராகும். ஆனால், இப்பகுதி முழுமையையும் அமைதியாகப் படித்துப் பார்க்கின், சிவ புராணம் என்பது இப்பகுதிக்குத் தரப்பட்ட தன்று; நூல் முழுவதிற்கும் ஆசிரியரால் தரப்பட்ட பெயராகும் என்ற உண்மை புலனாகலாம். இந்தப் பகுதி நூலின் பாயிரப் பகுதியாகும். கடவுள்மேல் நூல் எழுதுபவர்கள், முதல் பாயிரப் பகுதியில், கடவுள் வணக்கம் - நூலின் பெயர் - இந்தநூல் எழுத எனக்குப் போதிய தகுதியில்லை என்ற அவையடக்கம் - நூலால் பெறப்படும் பயன் ஆகியவற்றைக் கூறுவர். இத்தனையையும் தொடக்கப் பகுதி யில் மணிவாசகர் கூறியுள்ளார்: - 'சிவன் அவன் என் சிந்தையுள் கின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிங்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பன் யான் ... ... ... ... ... ... பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து” இந்தப் பாடல் பகுதியில் உள்ள அடிகளுள், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது கடவுள் வணக்கம்'சிவ புராணம் தன்னை உரைப்பன் என்பது நூல் பெயர்'பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்” என்பது அவை யடக்கம் - “பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் சிவனடிக் கீழ்ச் செல்வர்' - என்பது பயன்-ஆகும். இந்த முறையைத் திரு மூலர், கம்பர், சேக்கிழார் முதலிய பெரியோர்களும் கையாண்டுள்ளனர். ஒப்பு இலக்கிய நோக்கா கத் திருமூலரின் திருமந்திர நூல் ஒன்றினை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்: