பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 723 பாவைத் திரட்டு மணிவாசகரின் திருவெம்பாவையும் திருப்பள்ளி யெழுச்சி யும் ஆண்டாளின் திருப்பாவையும் கொண்ட தொகுப்பு. காசி மட இலவச வெளியீடு. சாதாரண ஆண்டு மார்கழித் திரு வாதிரை. பதிப்பு: வித்துவான் முத்துக் குமாரசாமித் தம் பிரான். கபீர் பிரின்டிங் ஒர்க்ஸ், சென்னை. மூன்றாம்பதிப்பு 1963. பதினோராம் பதிப்பு - 1971. பிற்காலப் பதிப்புகளில், குமர குருபரரின் சகலகலாவல்லி மாலையும் இடம்பெற்றுள்ளது இரு பாவை நூல்களின் தொகுப்புப் பதிப்பு, பலரால் பல ஆண்டுகளில் செய்யப்பெற்றுள்ளது. சைவ நூல் திரட்டு அச்சு - மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, சென்னை. நூல்கள்: ஒளவை விநாயகர் அகவல், அருணகிரி நாதர் அருளிய முக்தி விநாயகர் அகவல், நக்கீரர் அருளிய விநாயகர் அகவல், குமர குருபரரின் சகலகலா வல்லிமாலை, திருவாரூர் நான்மணி மாலை ஆகியன.அருணகிரி நாதர், நக்கீரர் ஆகியோர் பெயரால் விநாயகர் அகவல் இருப்பது குறிப்பிடத் தக்கது. திருமலைப் பாடல்கள் வெ-தெய்வீக வாழ்க்கைச் சங்கம், காஞ்சிபுரம். 1971. திருப்பதி பற்றியும் ஏழுமலையானைப் பற்றியுமான பாடல் களின் தொகுப்பு. கவிதா ரத்னம் ஹா.கி. வாலம் அம்மையார் உருகிப் பாடியவை நூலின் முதல் பகுதியில் உள்ளன. திரு வேங்கடத்தானின் உலகச் சிறப்பு, அவயவங்களின் மாட்சி, அருள் பிரபாவம் முதலியவை பற்றி வாலம் அம்மையார் பாடி யுள்ளார். நூலின் இறுதியில் இரண்டு பிற்சேர்க்கைகள் (அனு பந்தங்கள்) உள்ளன. அவற்றுள் முதலில், கவிஞர். கா.அ. சண்முக முதலியார் இயற்றிய திருவேங்கடப் பெரு மான் திருப்பள்ளி எழுச்சி, பெருமான் துதிகள், அலர்மேல் மங்கைத்தாயார் துதிகள், திரு வேங்கடப், புத்து ஆகிய நூல் கள் உள் ளன.