பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தமிழ் நூல் தொகுப்புக் கலை மூன்று பிரிவுகள்: நெடுந்தொகை, நெடுந்தொகை நானுநூறு, அகம், அகப்பாட்டு, அகநானூறு என்றெல்லாம் பெயர் வழங்கப்படு கின்ற நானூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் மூன்று பிரிவு களாக வழங்கப்படுகின்றது. அப்பிரிவுகளின் பெயர்கள்: களிற்றி யானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்பன. இந்நூலின் நானூறு பாடல்களுள் முதல் 120 பாடல்கள் 'களிற்றியான்ை நிரை' என்னும் தனிப்பெயரிலும், 121 முதல் 300 வரையும் உள்ள் 190 ப்ாட்ல்கள் மணிமிடை பவளம் என் னும் தனிப்பெயரிலும், 30 முதல் 400 வரையும் உள்ள இறுதி நூறு பாடல்கள் நித்திலக்கோவை' என்னும் தனிப் பெயரிலும் - தொகுக்கப்பட்டுள்ளன. இது சார்பான செய்திகளைத் தெரிந்து கொள்ளும் வகையில், அகநானூற்றின் இறுதியில் பாயிரம் என்னும் பெயரில் இருபத்தேழு அடிகள் கொண்ட அகவல் பா ஒன்றும், அதைத் தொடர்ந்து உரைநடைப் பத்திகள் மூன்றும் காணப்படுகின்றன. அவை நமது ஆராய்ச்சிக்கு மிகவும் இன்றி யமையாதன வாதலின், அதிலுள்ளாங்கு அப்படியே ஈண்டு வருமாறு: (பாயிரம்) "கின்ற நீதி வென்ற கேமிப் பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவுவிற் றிருந்த செறிவுடை மனத்து வான் றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை ஆய்ந்த கொள்கைத் தீங்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிகிமிர்ங் தொழுகிய - இன்பப் பகுதி யின்பொருட் பாடல் நானூ றெடுத்து நூன்வில் புலவர் களித்த மும்மதக் களிற்றி யானை கிரை மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய கித்திலக் கோவையென் றாங்கு அத்தகு பண்பின் முத்திற மாக